இர்ஸாத ஜமால்.எம்.ஏ-
அறிவு, ஊக்கம், ஈகை,அஞ்ஞாமை, தலைமைத்துவத்தின் பன்புகளாகும். இப்பன்புகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் வர்தக வாணிப அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் அவர்களிடத்தில் மாத்திரமே ஒன்றிணைந்து காணப்படுகின்றது.
அ.இ.ம. காங்கிரஸை பொத்துவில் மண்னில் விதைக்கும் நிகழ்வு நேற்று(01) பொத்துவில் அல் பஹ்ரியா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. இன் நிகழ்விற்கு தலைமை தாங்கிய அ.இ.ம.காங்கிரஸின் பொத்துவில் மத்திய குழுவின் தலைவர் அப்துல் ஹகீம் ஆசிரியர் தனது தலைமை உரையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தனது தலைமை உரையில் பொத்துவில் பிரதேசம் அரசியல் தலைமைகளாலும் கட்சிகளாலும் கொல்லை அடிக்கப்படும் ஒரு பிரதேசமாகும். இப்பிரதேசத்தில் இல்லை இல்லை என்பதை தவிர வோறொன்றும் இல்லை. அனைத்தையும் ஏமாற்றுப்பேர்வழிகள் மக்களை ஏமாற்றி ஏப்பமிட்டு விட்டார்கள் எனவும் தனது உரையில் தெரிவித்தார். பொத்துவில் மண்னிலும் மக்கள் வாழ்கின்றார்கள் என்பதை மறந்து விட வேண்டாம் என தலைமையை மிகவும் வேண்டிக்கொண்டார்.
அ.இ.ம.காங்கிரஸை விதைக்கும் விழாவிற்கு கட்சியின் தேசிய தலைவர் வர்தக வாணிப அமைச்சர் ரிஷாத் பதீயுத்தீன் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீத் கி.மா சபை உறுப்பினர் ஷிப்லி வ.ம.சபை உறுப்பினர் றிப்கான் மற்றும் ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அ.இ.ம.காங்கிரஸின் மத்திய குழுவால் இணங்கானப்பட்ட பல பிரச்சினைகளை நிவர்த்தி செய்து தருமாறு தலைமையிடம் வேண்டிக்கொள்ளப்பட்டன. தனியான கல்வி வலையம் சுகாதாரம் போக்குவரத்து காணிப்பிரச்சினைகள் பிரதானமாக காணப்பட்டன.
.jpg)