நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாகிறது-அமைச்சர் ஹசன் அலி நடவடிக்கை!

சுலைமான் றாபி-
டந்த சுனாமி அனர்த்தத்தின் போது முற்றாக சேதமடைந்து பின்லாந்து செஞ்சிலுவைசங்கத்தினரால் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்டு தற்போது மாவட்டவைத்தியசாலையாக இயங்கிக்கொண்டு வரும்நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

அந்தவகையில் கடந்த திங்கட்கிழமை (23)சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி அமைச்சின் செயலாளர் திருமதி பேர்ல் வீரசிங்க உள்ளிட்ட முக்கிய அமைச்சு உயரதிகாரிகள் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்த போது வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்கம் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இந்த விஜயத்தின் போது இவ்வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு பௌதீகவளங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு இவ்வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரினால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவைப்பத்திரத்தினை சமர்ப்பித்து ஆவணை செய்யவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி உறுதியளித்தார். 

மேலும் இவைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகைதரும் நோயாளிகளின் நன்மை கருதி அமைச்சரினால் ஒட்சிசன் செறிவாக்கி இயந்திரமும் வழங்கப்பட்டது.

இதேவேளை இந்த மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியாக டாக்டர் ஆகில் அஹமட் சரிபுதீன் கடைமையாற்றுவது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -