கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் வழங்கிய குடிநீர் திட்டம்




எம்.ஏ.அஹ்ஸன் அக்தர்-

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் கல்லூரியின் சகோதரப் பாடசாலையான கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் பாவனைக்கென குடி நீர் வழங்கும் திட்டமொன்றை ஆரம்பித்து வைத்தனர்.

இந்நிகழ்வில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் , பிரதி அதிபர்எம்.எஸ்.முஹம்மட் , கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் எம்.எச்.நவாஸ் , ஸாஹிரா பழைய மாணவர்சங்க கொழும்பு கிளையிள் தலைவர் டாக்டர் சனூஸ் காரியப்பர் , உறுப்பினரும் இலங்கை ரூபவாஹினிகூட்டுத்தாபன அறிவிப்பாளருமான எம்.அன்சகான் , பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவரும் சாய்ந்தமருதுமாவட்ட வைத்தியசாலை பொறுப்பதிகாரியுமான டாக்டர் என்.ஆரிப் , ஸாஹிராக்கல்லூரி பாடசாலைஅபிவிருத்தச் சங்க செயலாளர் நில அளவையாளர் எம்.ஏ.றபீக் , பழைய மாணவர் சங்க செயலாளரும்தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளருமான பொறியியலாளர் ஏ.எம்.அஸ்லம் சஜா , உபசெயலாளர் பொறியியலாளர் எம்.ஸி.கமால் நிஸாத் , ஏ.அபுல்ஹஸன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -