செயலாளர் தர்மலிங்கத்துக்கு ஓட்டமாவடி பிரதே சபை கோலாகல பிரியாவிடை-படங்கள்






ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்- 

ஓட்டமாவடி பிரதேச சபையில் 2010ம் ஆண்டு தொடக்கம் தொடர்ந் தேர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் சபையின் செயலாளராக கடமையாற்றிய அறுபது வயதினை நிரம்பிய ஆர்.தர்மலிங்கம் இன்றுடன் தனது 32 வருட அரசாங்க சேவைக்காலத்தினை நிறைவு செய்து ஓய்வு பெற்றுச் செல்வதனை முன்னிட்டு ஓட்டமாவடி பிரதே சபையின் தவிசாளர் சபை உறுபினர்கள், சபையில் கடமையாற்றும் நிருவாக உத்தியோகத்தர்கள்,ஊழியர்களினால் கோலாகலமாக இன்று வெள்ளிக்கிழமை (14.02.2015) பிரியாவிடை அளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

இவ்வைபவத்துக்கு பிரதம அதீதியாக பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் சட்டத்தரனி சித்ரவேல் கலந்து கொண்டதுடன், ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஹமீட், பிரதி தவிசாளர் நெளபர், சபை உருப்பினர்களான ஐ.ரி.அஸ்மி, முஹாஜீரீன் ஆசிரியர், அன்வர் ஆசிரியர், ஜுனைட் நளீமி, கடமையை பொறுப்பெற்க இருக்கின்ற புதிய செயலாளர் சாபீ, சபையின் நிருவாக உதியோகத்தர்கள், ஊழியர்கள் என அனைவரும் பிரசன்னமாயிருந்தனர்.

இங்கு உரையாற்றிய ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஹமீட், செயலாளர் தர்மலிங்கம் அவருடைய சேவைக்காலத்தில் இங்கு பல பிரச்சனைகளுக்கு மத்தியில் பதவியினை பொறுப்பேற்றும் திறம்பட தனது சேவையினை யாரையும் பகைத்துக் கொள்ளாமல் எல்லோருடனும் புன்னகை கலந்த முகத்துடன் ஐந்து வருடங்களாக கடமையாற்றியதுடன், தனக்கு பிரச்சனைகள் ஏற்படும் போது மிகவும் உறு துணையாக இருந்தகாகவும் தெரிவித்தார். 

இதன் போது சபை ஊழியர்களினால் 37000 பெறுமதியான காசோலையும், தவிசாளர், உறுப்பினர்களால் 35000 பெறுமதியான காசோலையும், நினைவுச் சின்னங்களும் ஓய்வு பெற்றுச் செல்லும் செயலாளர் தர்மலிங்கத்துக்கு அன்பளிபுச் செய்யப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -