முஸ்லிம் காங்கிரஸும் - தனித்துவமும்

Mr.MA.Jeswath-

னித்துவத்தின் மூலம் தங்களை அடையாளப்படுத்துவதை எல்லா நாட்டிலும் வாழும் பெரும்பான்மை,சிறுபான்மை மக்கள் உரிமையாகக் கருதுகின்றனர். இலங்கையில் பெரும்பான்மையின மக்களுக்காக பிரதானமாக 3 கட்சிகளும், தமிழ் மக்களுக்காக பிரதானமாக 1 கட்சியும் உண்டு.

சிறுபான்மை மக்கள் நேரடியாக பெரும்பான்மை கட்சிகளுடன் இணைந்து செயற்படும் போது அபிவிருத்திகள் கிடைக்கப் பெற்றாலும்,உரிமை விடயத்தில் பூரண திருப்திகரமான நிலையை அடைய முடியாது.

இதனாலேயே சிறுபான்மை மக்களுக்கான கட்சிகள் தோற்றம் பெற்றன. அந்த வகையில் முஸ்லிம்களின் உரிமை,தனித்துவத்தை பேணுவதற்காக மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களால் முஸ்லிம் காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது. எமது தனித்துவம், உரிமை காப்பதில் "சேகு" க்களின் பிரசன்னம்,சில நகர்வுகள் இரண்டு தலைவர்களுக்கும்,மக்களுக்கும் அதிருப்தியாகவே இருந்தது.

எனினும் தலைவர் அஷ்ரபின் காலத்தில் கட்சி ஒரு கட்டுக்கோப்புடனும்,ஒழுக்கத்துடனும் இருந்தது. அவரின் மரணத்தின் பின் தலைமைத்துவ ஆசைகளாலும், தனிப்பட்ட கருத்து முரண்பாடுகளாலும் குதிரைகளும், மயில்களும் தோற்றம் பெற்றது. இவற்றின் தோற்றம் எமது உரிமை,தனித்துவம் காப்பதில் சில சமயங்களில் தடையாக இருந்தது.காரணம் இவர்களின் சோரம் போகும் தன்மையே.

இன்றைய தலைவருக்கு சில பாராளுமன்ற, மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் வாக்களித்த மக்களை மறந்து தங்கள் சுகபோகங்களுக்காக தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்துகின்றனர். எனவே,தலைவர் அஷ்ரபை போன்று மு.கா தலைவர் ஹக்கீமும் கட்சியை கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க வேண்டும். 

தலைமையை தர்மசங்கடமான நிலைக்கு கொண்டு வருபவர்களை மக்கள் முன் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அத்தோடு பிரிந்து சென்றவர்களை மீளழைத்து உரிய அதிகாரங்களை வழங்கி பிரதேசவாத,பிரிவினைவாதங்களை அகற்ற வேண்டும்.

இது பல தாய்மாரின் கண்ணீராலும், பல சகோதரர்களின் தியாகங்களாலும் வளர்ந்த மரம்.எனவே,கட்சியை மக்கள் காப்பாற்றுவார்கள் என்ற நிஜத்தை மு.கா தலைமை உணர்ந்து, தயக்கமடையாது, தைரியத்துடன் நயவஞ்சகர்களை மக்கள் முன் கூற வேண்டும். ஏனெனில் நயவஞ்சகர்களுக்கும் வாக்களிப்பது மக்களே. இன்றைய மு.கா தலைவர் கட்சியை கட்டுக்கோப்புக்குள் வைத்திருப்பதில் பின்நிற்கிறார் என்பதே உண்மை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -