சுலைமான் றாபி-
காரைதீவு - அம்பாறை வீதியில் காணப்படும் மாவடிப்பள்ளி பாலம் போக்குவரத்திற்கு மிக முக்கிய பங்கினை வகிக்கின்றது. அந்த வகையில் இந்த பாலத்தினூடாக இரவிலும், பகலிலும் அநேகமானோர்கள் தங்கள் வாகனங்களிலும், இன்னும் துவிச்சக்கர வண்டிகளிலும் பிரயாணம் செய்கின்றனர். இருந்த போதும் துவிச்சக்கர வண்டியினூடாக இரவில் பிரயாணம் செய்யும் பிரயாணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.
அந்த வகையில் மாவடிப்பள்ளியை ஊடறுத்துச்செல்லும் ஆற்றில் அதிகளவான முதலைகள் காணப்படும் அதேவேளை அவைகள் இரவிலும், பகலிலும் ஆற்றினை விட்டு வெளியே உலாவுவதினை நன்றாக அவதானிக்க முடிந்துள்ளது. இதனால் இரவில் பிரயாணம் செய்யும் பிரயாணிகள் அச்சத்துடன் இந்த பாலத்தைக் கடந்து செல்கின்றனர். மேலும் அலுவலகங்கள், மேலதிக பகுதிநேர வகுப்பிற்கு சென்றுவரும் மாணவர்கள் கூட பஸ் வண்டிகள் மூலமாக பிரயாணம் செய்ய சந்தர்ப்பம் கிடைக்காதவிடத்து இந்தப் பாலத்தினூடாகவே நடந்து தங்கள் வீடுகளுக்கு செல்கின்றனர்.
எனவே பொதுமக்களினதும், பிரயானிகளினதும் நன்மை கருதி இந்த பாலத்தினையும், அதனை அண்டிய பிரதேசங்களினையும் பிரகாசமான மின் விளக்குகள் மூலம் ஒளிரச்செய்து முதலைகள் மீதான அச்சம் மற்றும் இரவில் ஏற்படும் சில அசௌகரியங்களை நீக்குவதற்கு சிறந்த வழிகோலாக அமையுமல்லவா?
எனவே இந்த விடயத்தில் கூடுதல் கரிசனை எடுத்து இந்த பாலம் அமைந்துள்ள இடத்தில் பிரகாசமான மின்விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும். காரைதீவு பிரதேச சபை தவிசாளரே இது உங்களின் கவனத்திற்கு..!
.jpg)
.jpg)
.jpg)
.jpg)