சுலைமான் றாபி-
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சிரேஷ்ட தொழில் நுட்ப உத்தியோகத்தராக கடமை புரிந்த P.கணேஷமூர்த்தி அவர்கள் தனது 27 வருட கால அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றதினையடுத்து இன்று (23) அவரிற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக மாகாணப் பணிப்பாளார் பிரிவிற்குட்பட்ட சகல அலுவலகங்களும் இணைந்து அவரின் சேவையினைப் பாராட்டி கௌரவித்தது.
கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் ஏ.எம்.எம். ஜாபிர் தலைமையில் சம்மாந்துறை அலகுக்காரியாலயத்தில் இடம்பெற்ற இக்கௌரவிப்பு நிகழ்வில் அக்கரைப்பற்று மேலதிக மாகாணப் பணிப்பாளர் ஏ.எல்.எம். நிஸார், பிரதம பொறியியலாளர் ஐ.எல்.அமீனுல் பாரி, நிறைவேற்றுப் பொறியியலாளர் கே.எல்.எம். இஸ்மாயில் உள்ளிட்ட அதிகாரசபையின் பொறியியலாளர்கள், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், உதவியாளர்கள், உதவி கணக்காளர்கள், நிருவாக உதவியாளர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
இதேவேளை சிரேஷ்ட தொழில் நுட்ப உத்தியோகத்தர் P.கணேஷமூர்த்தி அவர்களின் சேவையினைப் பாராட்டி அனைத்து அலுவலகம் சார்பாக மேலதிக மாகாணப் பணிப்பாளர் ஏ.எல்.எம். நிஸார், பிரதம பொறியியலாளர் ஐ.எல்.அமீனுல் பாரி ஆகியோர்களினால் பொன்னாடை போர்த்தியும், ஞாபகச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
.jpg)
.jpg)
.jpg)