காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதியுயர் பீட உறுப்பினரும், கட்சியின் கிழக்கு மாகாண மகளிர் பிரிவு அமைப்பாளருமான சல்மா ஹம்சாவின் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான அமைச்சர் றஊப் ஹக்கீம் மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தலைவர் மர்சூக் அகமது லெவ்வை மற்றும் அல்கிம்மா நிறுவனத்தின் தலைவர் மௌலவி எம்.எஸ்.ஹாறூன் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த வைபவத்தில் கட்சியின் மகளிர் அணி உறுப்பினர்களுக்கு அங்கத்துவம் வழங்கப்பட்டதுடன் அல்கிம்மா நிறுவனத்தினால் அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தினை ஊக்குவிக்கும் வகையில் காத்தான்குடியைச் சேர்ந்த ஐம்பது குடும்பங்களுக்கு இலவச குடி நீரை பெற்றுக் கொள்வதற்கான உதவிகள் வழங்கப்பட்டது.
இதன் போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் அமைச்சர் றஊப் ஹக்கீமுக்கு காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா ஹம்சாவின் கணவர் அமீர் ஹம்சா பொன்னாடை போர்த்தியதுடன் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா ஹம்சா அமைச்சருக்கு நினைவுச்சின்னம் வழங்கி வைத்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)