அவரும் - இவரும்

'நான் என்னும் நீ'
என்றார் அவர்
'நீ என்னும் நான்'
என்றார் இவர்

'நான் நீயாக முடியுமா?'
என்றார் அவர்
'நீ யாக நான் ஆவேன்'
என்றார் இவர்

'நான் நானே தான்'
என்றார் அவர்
'நீ நானும் தான்'
என்றார் இவர்

'நான்' ஆகி 'நீ' ஆகி
'நாமாவோம்'
என்றார் அவர்
'நாம் ஆகி நலதாகி
நலமாவோம்'
என்றார் இவர்

'நமதாகி வளமாகி
களமாவோம்'
என்றார் அவர்
'களமாகி குலமாகி
பலமாவோம்'
என்றார் இவர்

'பலமாகி பணியாகி
கனியாவோம்'
என்றார் அவர்
'கனியாகி கருவாகி
மரமாவோம்'
என்றார் இவர்

'மரமாகி நிழலாகி
மனையாவோம்'
என்றார் அவர்
'மனையாகி துணையாகி
இணையாவோம்'
என்றார் இவர்

'இணையாகி அணையாகி
இருவரும் ஒருவராகி
பிணையாவோம்'
என்றார் அவர்

பிணையானார் முனையானார்
பிடிப்பானார் துடிப்பானார்
படிப்பானார் அப் பெரியார்கள்
அஷரப்,ஹக்கீம் பெயர் வாழி
அவரிருவர் குறி வளர்க நீழி!

கவிஞர் கலாபூஷனம் ஆசுகவி அன்புடீன்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -