NFGG நடாத்திய விஷேட ஊடக சந்திப்பு



ல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) ஏற்பாடு செய்திருந்த விஷேட
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நேற்று 25.01.2015 இரவு 7.00 மணியளவில் அதன்
காத்தான்குடி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர்
MM.அப்துர் ரஹ்மான், அதன் தேசிய அமைப்பாளர் MBM .பிர்தௌஸ் மற்றும்
தலைமைத்துவ உறுப்பினர்களான பொறியியலாளர் MM.பழுலுல் ஹக், ALM .சபீல்
உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பின்போது தேர்தலுக்குப் பின்னரான மக்களுக்கு நன்றி
தெரிவிக்கும் வகையில் NFGG நடாத்திவரும் மக்கள் சந்திப்புக்களைக்
குறிவைத்து SLMC உறுப்பினர்காளால் கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டு
வருகின்ற வன்முறைகளை NFGG வன்மையாகக் கண்டிப்பதாகவும், இந்தக்
காடைத்தனங்களை மேற்கொள்வோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் NFGG பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

அத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்கள்
தொடர்பில் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் நகரசபைத்
தவிசாளர் SHM.அஸ்பர் போன்றோரால் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்துக்கள்
தொடர்பாகவும் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -