இலஞ்சம் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழுவின் விசாரனை இன்று!

அஸ்ரப் ஏ சமத்-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் 12 அரச நிறுவணங்களின் இலஞ்சம் மற்றும் முறைகேடுகள்,அரச பொதுசொத்துக்கள் நிதி முறைகேடாக தேர்தல் காலத்தில் சொத்துக்களை பாவித்தமை பற்றிய முறைப்பாட்டை ஜே.வி.பி. கட்சியினர் கொழும்பு 7 இல் உள்ள இலஞ்ச ஆணைக்குழுவுக்கு ஏற்கனவே சமர்ப்பித்திருந்தனர்.

இன்று இவ் விசாரனை ஆணையாளரினால் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. முறைப்பாட்டாளர்களான ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பிணர் விஜித்த கேரத் இன்று ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். 

இதில் சமுர்த்தி திவிநகும், பாதுகாப்பு நகர அபிவிருத்தி சுற்றாடல்துறை அமைச்சு, விமாண போக்குவரத்து இலங்கை அரச வங்கிகள், மத்திய வங்கிகள் போன்றவற்றின் கோடிக்கணக்கான ஊழல்கள் இடம்பெற்றுள்ள்ன. 

இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பிணர் விஜித்த கேரத் மேற்படி திணைக்களங்களின் சகல தகவல்களும் நாங்கள் சேகரித்து வைத்துள்ளோம். அவற்றுக்கு முன் இலஞ்ச ஆணையாளர் பொலிஸ் மற்றும் அதிகாரிகள் இவற்றை விசாரணை செய்து ஆகக் குறைந்தளவு இவர்கள் சேகரித்து வைத்துள்ள சகல சொத்துக்களையும் அரச உடைமையாக்கும் கடமையாவது இந்த திணைக்களம் செய்தல் வேண்டும். என கருத்து தெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -