அஸ்ரப் ஏ சமத்-
நேற்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கபட்ட இடைகால வரவு செலவு செலவு திட்டத்தின் படி ஆயிரம் சீ சீ க்கு உற்பட்ட கார்களுக்குக்கான வரி 15% குறைக்கப்பட்டுள்ளபோதும் ஹைபிரிட் வகை கார்களின் விலை எட்டு தொடக்கம் பன்னிரண்டு லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரபல வாகன இறக்குமதி வர்தகரான குளோபல் கொமிடிடீஸ் சிலோன் நிறுவன உரிமையாளர் மடவளை பசார் ஜே எம் நுஸ்ரத் அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது
இறக்குமதி செய்யப்படும் ஹைபிரிட் வகை கார்களின் வரி அதிகரிப்பானது வாகன விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
தற்போதைய சந்தையில் டொயோடா அக்குவா சிறிய வகை கார்கள் சுமார் நாற்பத்து லட்சத்தில் இருந்து விற்பனையாகின்றது.
இந்த வரி அதிகரிப்பின் பின்னர் இதன் விலை சுமார் ஐம்பது லட்சம் வரை விற்பனை செல்லும் வாடிக்கையாளர்கள் ஐம்பது லட்சம் ரூபாவுக்கு சிறிய வகை காரை கொள்வனவு செய்யமாட்டார்கள் இது எமது வர்த்தகத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் ஏற்படுத்தும் என குறிப்பிட்ட அவர் தற்போது சுமார் ஐம்பது லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஹைப்ரிட் பெரிய வகை கார்களின் விலை அறுபது லட்சத்தைதாண்டும் என குறிப்பிட்டார்.
இந்த வரி அதிகரிப்பின் காரணமாக வாகன வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் தவிர பெரும் எண்ணிக்கையிலான முகவர்களும் பாதிக்கப்படுவார்கள் என குறிப்பிட்ட அவர் எதிர்வரும் காலங்களில் வாகன இறக்குமதி வர்த்தகம் பாரிய நெருக்கடிகளை சந்திக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

.jpg)