வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்குடன் விசேட நடவடிக்கைகளை உள்ளடக்கிய இடைக்கால வரவு செலவுத் திட்டம் ஒன்று இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நிதி அமைச்சரின் விசேட அறிவிப்பையாக இந்த இடைக்கால வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவைத்தலைவர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
இதில் பல நிவாரணங்களுடன் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பிலான முக்கிய விடயங்களும் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இன்று அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை ஒன்றும் நடைபெறுகிறது.
அத்துடன் இந்த வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 5ம் மற்றும் 6ம் திகதிகளில் விவாதிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
