மாமியாவின் பெயரில் உறுதி அக்கரைப்பற்று பல்தேவைக் கட்டிடம்-மறுப்புச் செய்தி! !

பிழையான தகவல்: அக்கரைப்பற்று பல்தேவைக் கட்டிடம் சம்மந்தமாக
இக்கட்டிடம் அக்கரைப்பற்று சோஷா  அமைப்பு ஆலிம் நகர் மக்களின் பொது தேவையைக் கருத்தில் கொண்டு சோஷா அமைப்பின் கிளைக் காரியாலயம், பாலர் நிலையம், கிராம நிலதாரி காரியாலயம், சமுர்த்தி உத்தியோகத்தர் காரியாலயம், கூட்ட மண்டபம் என்ற அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சோஷா அமைப்பு UNDP நிறுவனத்திடம் வழங்கிய திட்ட முன்மொழிவின் கீழ் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது. 

இக்கட்டிடம் சம்மந்தமாக சோஷா  நிறுவனம் தவிர்ந்த எந்த குழுவோ தனி நபர்களோ உரிமை கோர முடியாது என்பதனை இத்தால் சகருக்கும் அறியத் தருகின்றோம். 

கடந்த 2005ம் ஆண்டிலிருந்து கிளைக் காரியாலயம், பாலர் நிலையம், கிராம சேவகர் காரியாலயம், சமுர்த்தி உத்தியோகத்தர் காரியாலயம் போன்றன இயங்கி வருகின்றது. 2012ம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டு வரை இக்கட்டிடத்தில் சிவில் பாதுகாப்பு குழுவின் காரியாலயமும் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. 

2012ம் ஆண்டிலிருந்து சோஷா  அமைப்பிற்கும் பிரதேச செயலகத்திற்குமிடையிலான உடன்பாட்டின் அடிப்படையில் பிரதேச செயலகத்தின் கிராம சேவகர் காரியாலம், சமுர்த்தி உத்தியோகத்தர் காரியாலயம், அபிவிருத்தி உத்தியோகத்தர் காரியாலயம் போன்றன தற்போது இயங்கி வருகின்றது. 

பாலர் நிலையத்தினை தற்போது இக்கட்டிடத்திற்கு எதிரிலுள்ள பாடசாலையில் நடாத்தப்பட்டு வருகின்றது. எனவே தயவு செய்து ஊடகங்களுக்கு பிழையான செய்திகளை அனுப்பி சமுக சேவையில் நேர்த்தியாகவும் தூய்மையாகவும் பணியாற்றுகின்ற  சோஷா அமைப்புக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என இறைவனை முன்னிறுத்தி வேண்டிக் கொள்கின்றோம். 

தனிப்பட்ட அரசியல் ஒழுங்குகளை எமது அமைப்பிற்குள் நுளைக்க வேண்டாம் என்றும் எந்த அரசியல் கட்சியின் உறுப்பினர்களும் எமது அமைப்பில்; உறுப்பினராக இருக்க முடியாது என்பதனையும் இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

S.L.M.நாஸிர்
செயலாளர்
சோஷா.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -