அக்கரைப்பற்று பல்தேவைக்கட்டிடம்- மாமியாவின் பெயரில் உறுதி -அதிர்ச்சித்தகவல்


அக்கரைப்பற்று ஆலிம்நகர் (5ம்கட்டை) கிராமத்தில் UNDP நிறுவனத்தினால் பல இலட்சம் ரூபா செலவில் கட்டப்பட்ட பல்தேவைக்கட்டிடம் முறையாக ஆலிம்நகர் பொதுமக்களின் பாவனைக்கு கையளிப்புச்செய்யப்படாமல் சுமார் 14வருடமாக இழுத்து மூடியிருப்பதன் மர்மம்தான் என்ன..........?

அபிவிருத்தி உத்தியோகத்தருக்கான காரியாலயம், நடமாடும்சேவை, கிராமசேவையாளர் காரியாலயம், நலன் விரும்பிகளுக்கான மக்கள்சந்திப்பு இளைஞர்விவகாரம் தொடர்பான பயிற்சித்திட்டமென ஆலிம் நகரிலுள்ள மக்களின் பொதுவேலைகள் அனைத்தையும் ஒரு கூரையின் கீழ் கொண்டுவரப் பொருத்தமான கடிட்டிடம் இதுவாகும்
இதுவரைக்கும் அவ்வாறான செயற்திட்டம் தொடராக ஸ்திரப்படுத்தப்படாததால்; இக்கட்டிடம் கட்டியதில் இருந்து பயன்பாடற்று உடைந்து சேதப்பட்டு வருவதோடு அங்குள்ள மக்களும் கவனிப்பாரற்ற நிலையிலுள்ளனர்.

கிராமிய அபிவிருத்தி என்ற பெயரில் சேட்டை உள்ளே விட்டு பெல்ட்டை வெளியே கட்டிக்கொண்டு ஏழைகளுக்கு முன்னால் வாய் கிழிய பெருமை பேசி விட்டு கிராமியமக்களின் வறுமைகளை விற்று வயிறு வளர்க்கும் கொள்ளைக் கோஷ்டிகளான சில மரமண்டைகளுக்கு கிராமிய அடிப்படை வாழ்வியல் தொடர்பான சிந்தனை கொஞ்சமும் இல்லை என்பது இக்கட்டிடத்தின் பின்னணியையும் அக்கரைப்பற்றுப் பிரதேசசபைக் கிராமிய மக்களின் வாழ்வு நிலையையும் பார்க்கும்போது தெளிவாகத் தெரிய வருகிறது.

மேலும் அக்கரைப்பற்று மாநகர சபையின் உறுப்பினரும் சோஷா நிறுவனத்திலுள்ளவருமான ஒருவர்; ஆலிம் நகர் பொது மக்களுக்குச் சொந்தமான இப்பல்தேவைக்கட்டிடத்திற்கு தனது மாமியாவின் பெயரில் உறுதி முடித்துவைத்துக்கொண்டு உரிமைகொண்டாடி வருகிறார்.

அதனாலேயே இக்கட்டித்திற்கு நிதி ஒதுக்கி புனர்நிர்மாணம் செய்து மக்களுடைய பாவனைக்கு இதனை விட முடியாயமல் உள்ளதாகவும் ஒரு செய்தி எட்டியுள்ளது.

எனவே மேற்படி விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களும் பிரதேச சபையின் தவிசாளர் ஏம்.ஏ.றாசீக் அவர்களும் தனது மேலான சமூக உணர்வினைத் தட்டியெழுப்பி ஆலிம்நகருக்கு சொந்தமான பல்தேவைக்கட்டிடத்தினை புனர் நிர்மாணம் செய்து ஆலிம்நகர் மக்களிடமே ஒப்படைப்பதற்கான துரித நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு மக்கள் சார்பில் தயவாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

எச்.ஜே.எம்.இன்ஹாம்
எதிர்க்கட்சித் தலைவர் பிரதேச சபை
அக்கரைப்பற்று

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -