எம்.எஸ்.சம்சுல் ஹுதா-
பொத்துவில் பொலீஸ் நிலையத்திற்கு கடந்த 2014.11.29 ம் திகதி இடமாற்றம் பெற்று வந்த பிரதம பொலீஸ் அதிகாரி எம்.கே. இப்னு அஸார் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் 2015.01.29 நடைமுறைக்கு வரும் வகையில் அம்பாறை பொலீஸ் நிலயத்தில் கடமையாற்ற பணிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த இரண்டு மாதங்களாக பொத்துவில் பிரதேசத்தில் கடமையாற்றிய போது எந்தவொரு மக்களதும் எதிர்ப்புக்குள்ளாகாது கட்சி பேதமின்றி நேர்மையாக கடமையாற்றி வந்தார்.
இருந்த போதும் இவரது திடீர் இடமாற்றம் குறித்து பொத்துவில் மக்கள் ஆழ்ந்த துயருடன் காணப்படுகின்றார்கள். அரசியல் தலையீடா? அல்லது நிர்வாக இடமாற்றமா ?
மீண்டும் இப்னு அஸார் பொத்துவில் பொலீஸ் நிலையத்திற்கு தேவை மக்கள் கருத்து.