ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் இருந்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கடைசி நேரத்தில் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்கள். முஸ்லிம்களுக்கு உறுதியான கொள்கை இருக்க வேண்டும். கடைசி நேரத்தில் கைவிடுவது சரியில்லை. தலைவர் பிழை செய்கிறார் என்று கண்டால் அப்போதே விலகியிருக்க வேண்டும் என்று சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி தெரிவித்தார்.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அரசாங்கத்திலிருந்து விலகி பொது எதிரணியின் பக்கம் இணைந்தமை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் ஜனாதிபதி மூவின மக்களையும் அரவணைத்து செல்லவே திடசங்கற்பம் பூண்டுள்ளார். இந் நிலையில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இனவாதம் பேசி பிரிந்து சென்றுள்ளமை கவலைக்குரியதாகும். இது சமூகத்தைக் காட்டிக் கொடுக்கும் செயலாகும்.
ஜனாதிபதியின் மீது நம்பிக்கை இல்லா விட்டால் அவர்கள் இறுதி நேரம் வரை காத்திருக்கத் தேவையில்லை. அரசாங்கத்தில் இருந்து கொண்டு சகல வரப்பிரசாதங்களையும் பெற்று அனுபவித்து விட்டு தமது சுய நலன் கருதி சமூகத்தின் நலனை மதியாது ஜனாதிபதி சரியில்லை என்று கூறுவது நகைப்புக்குரியதாகும்.
அரசிலிருந்து பிரிந்து செல்வதற்கு ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்படும் வரை இருந்திருக்கத் தேவையில்லை. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு மூன்று கிழமைகளின் பின்பே ரிஷாத் விலகிச் சென்றார். ரவூப் ஹக்கீம் ஒரு மாதத்தின் பின்பு விலகிச் சென்றார். பைசர் முஸ்தபா இரண்டு தினங்களுக்கு முன்பு பிரிந்து சென்றார். இவர்களின் வெளியேற்றம் சமூக நலன் சார்ந்ததாக இல்லை. சுயநலன் கொண்டதாகவே உள்ளது.
பிரதியமைச்சர் கண்டியிலிருந்து அம்மக் களை ஏமாற்றி விட்டு கொழும்புக்கு வந்தார். கொழும்பு மத்தி அமைப்பா ளர் பதவியையும் பெற்றார். தற்போது கொழும்பு மக்களையும் ஏமாற்றி எதிரணி யில் இணைந்துள்ளார். முஸ்லிம்களிடம் உறுதியான கொள்கை இருக்க வேண்டும். தலைமைத்துவத்துக்கு கட்டுப்படும் பண்பு இருக்க வேண்டும்.
முஸ்லிம் அரசியல் தலைவர்களின் சுய நல அரசியலை மக்கள் நன்கறிந்திருக்கி றார்கள். அவர்கள் மஹிந்த ராஜபக் ஷவை ஆதரிக்க ஏற்கனவே தீர்மானித்து விட்டார்கள். அவர்கள் பொது எதிரணியில் இணைந்திருக்கும் முஸ்லிம் தலைவர்களின் பசப்பு வார்த்தைகளுக்கும் உறுதி மொழிகளுக்கும் மயங்கி விடாது ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும்.
