கிழக்கு முதலமைச்சர் பதவியை தீர்மானிப்பது அமைச்சர் ஹக்கீம் தான்!

னாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலான முதலமைச்சர் தெரிவுக்கு பச்சைகொடி காட்டியுள்ள நிலையில், கிழக்கு முதலமைச்சரை நியமிக்கும் அதிகாரம் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களை சந்தித்த ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி மற்றும் பிரதமருடைய பச்சைக்கொடி குறித்து குறிப்பிட்டுள்ளதுடன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஒற்றுமைபட்டு, முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒரு முதலமைச்சரை தெரிவு செய்யும்படி வேண்டியுள்ளார்.

எனினும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தாம், ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளாது, அந்த தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரத்தை மீண்டும் ரவூப் ஹக்கீமிடம் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து மிகவிரைவில் கிழக்கு மாகாண முதலமைச்சராக, முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒருவரின் பெயரை ரவூப் ஹக்கீம் அறிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது. ஜமு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -