சட்ட விரோத காணி ஆக்கிரமிப்பு விசாரனைக்குற்படுத்த வேண்டும்- ஜுனைட் நளீமி ஜனாதிபதிக்கு கடிதம்

கோரளைப்பற்று பிரதேச சபை செயலாளரினால் முன்னாள் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பெயரில் கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை எல்லையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறையற்ற காணி அத்துமீரலானது இப்பகுதியில் வாழும் இனங்களுக்கிடையில் வீனான சந்தேகங்களையும் விரிசல்களையும் ஏற்படுத்த வாய்ப்பாக அமைந்துள்ளது. 

உரிய நிர்வாக நடைமுரைகளுக்கப்பால் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் உடனடியாக இது தொடர்பில் உடனடி விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனக்கோரி சுனைத் நளீமி ஜனாதிபதி அவர்களுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் எழுத்து மூலம்  அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.


குறிப்பிட்ட கடிதம்..

அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
ஜனாதிபதி, மற்றும் பாதுகாப்பு அமைச்சர்,
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு, 
ஜனாதிபதி செயலகம்,
கொழும்பு.

முறைகேடான காணி அபகரிப்பு திட்டம் தொடர்பாக.

எமது பிரதேச சபை எல்லைக் குட்பட்ட தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவு பகுதியில் முறையற்ற காணி அபகரிப்பு முயற்சி ஒன்று  மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையினால் மர நடுகையும் தின்மக்கழிவு முகாமைத்துவமும் என்ற திட்டத்தின் கீழ் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பெயரினைப்பயன்படுத்தி மட்டக்களப்பு மாவட்ட கரையோரம் பேணல் திணைக்களம் அரச சார்பற்ற நிறுவனங்களின் 2.2 மில்லியன் நிதியினை பயன்படுத்தி காணி ஒன்றினை தமது பரிபாலனத்தின் கீழ் கொண்டுவந்துள்ளது. இக்காணியில் தற்போது தென்னை பயிரிடப்பட்டுள்ளது.

 குறித்த நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக பொதுமக்களினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை கருத்திற்கொண்டு எமது பிரதேச சபை தவிசாளரிடம் வினவிய போது தம்மிடம் முறையான எவ்வித கோரிக்கைகளும் விடப்படாமல் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும், இதற்கு வாழைச்சேனை மத்தி பிரதேச செயலக அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். இது தொடர்பில் குறித்த இரு அரச அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதன் மூலம் வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் இத்திட்டத்தினை முறையாக எமது சபைக்கு கையளிப்பதட்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார். இது தொடர்பில் தாம் மாவட்ட கரையோர வளம் பேணல் திணைக்களத்திற்கும் பிரதேச செயலாளருக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இத்திட்டமானது முறையாக எமது சபையின் உரிய அனுமதிகளை பெறாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளதனாலும், குறித்த பகுதி இரு சமூகங்கள் வாழும் எல்லைப்பகுதி என்பதனாலும் முஸ்லிம்களது பிரதேச எல்லைக்குள் அமைந்திருப்பதனாலும் இனங்களுக்கிடையில் பிழையான சந்தேகங்களும், முறுகல் நிலைகளும் ஏற்பட வாய்ப்பாக உள்ளது. குறிப்பிட்ட சிலரது தனிப்பட்ட நலன்களும் இதில் அடங்கி இருப்பதாக சந்தேகிக்க இடம் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய நில ஆக்கிரமிப்பு முயற்சியானது யுத்தத்திற்கு பிந்திய சகவாழ்வு நிலையில் விரிசலை ஏற்படுத்த வாய்ப்பாக உள்ளது. எனவே குறித்த திட்டம் தொடர்பில் பூரன விசாரணை ஒன்றை மேற்கொள்வதுடன் உரிய நிலப்பரப்பை எமது சபையின் அதிகாரத்துக்கு கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவதன் மூலம் புதிய அரசின் நல்லாட்சி என்ற சிந்தனையை வழுபடுத்தி எமது மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு நட்செய்தியாக அமையும் என எதிர்பார்கின்றேன்.

இவ்வண்ணம் 
அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.ஜுனைட் (நளீமி)

பிரதிகள்: பணிப்பாளர், கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம்.
  உள்ளுராட்சி ஆணையாளர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -