அஸ்ரப் ஏ சமத்-
வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் கீழ் வருகின்ற நிறுவனங்களில் இலஞ்சம் ஊழல்கள் மற்றும் நிதி கைமாறல்கள் அரச சொத்துக்கள் சட்டவிரேதமான முறையில் கையாடல், சமுர்த்தி அதிகார சபை, திவிநகும நிறுவணத்தில் கோடிக்கணக்கான நிதியில் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு தேர்தல் காலத்தில் பகிர்ந்தளிக்கப்ட்டுள்ளன.
அதே போன்று வீடமைப்பு அதிகார சபையின் காணிகள், வீடுகள், வீடமைப்புக் கடன்கள் முறைகேடாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இம் முறைப்பாடுகள் மற்றும் நிதிகள் பரிமாறப்பட்ட சம்பவங்கள் பற்றி பரிசீலனை செய்து ஒரு சுயாதீன கணக்காய்வறிக்கை அமைச்சருக்கு சமர்ப்பிப்பதற்கு அமைச்சின் செயலாளர் விமல சிறி பெரேரா உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேற்படி விடயம் சம்பந்தமாக 'ஏனாஸ்ட் யங்' எனும் காணக்காய்வாளர் கம்பனி வீடமைப்பு அமைச்சினையும், சமுர்த்தி அமைச்சினை 'பிரின்ஸ் வோட்டர் கூப்பர் கம்பனியும் கணக்காய்வினை பரிசீலித்து கணக்கறிக்கையை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
அமைச்சின் செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்கவே இக் கணக்காய்வாளர் அறிக்கையை குறுகிய காலத்திற்குள் ஆராய்ந்து அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்க உள்ளது.
சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்களில் கடந்த காலத்தில் பல்வேறு ஊழல்கள், இலஞ்சம், அரச சட்ட திட்டங்களுக்கு மாறாக நிதி மோசடிகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகளும் பொதுமக்களும் அரசியல்வாதிகளும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு அறிவித்துள்ளனர்.
இவ் விடயம் சம்பந்தமாக கடந்த இரண்டு நாட்களாக இவ் அமைச்சின் கீழ் வருகின்ற நிறுவனங்களின் அதிகாரிகளை அமைச்சுக்கு அழைத்து காலை 09மணியில் இருந்து நடு இரவு 12.00 மணிவரை நடாத்திய கூட்டத்தில் ஊழல்கள் நிதிமோசடி விடயங்கள் பற்றி அமைச்சருக்கு தெரியவந்துள்ளது.
இக் கணக்கறிக்கையை வீடமைப்பு அமைச்சு, கட்டிடத்; திணைக்களம், இலங்கை அரச காமன்ட் பெக்டறி, இலங்கை பொறியியற் கூட்டுத்தாபணம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, ஓசியன் கம்பணி, தேசிய கூட்டாதான அதிகார சபை, நிர்மாணக் கைத்தொழில் பயிற்சி நிறுவகம,; சமூர்த்தி அமைச்சு, சமுர்த்தி ஆணையாளர் திணைக்களம், மத்திய கிராமிய புனர்நிர்மாண திணைக்களம், திவிநகும – சமுர்த்தி அதிகார சபை, திவிநகும அபிவிருத்தி திணைக்களம், திவிநகும் 6 பிராந்தியத் திணைக்களங்களும், மேலும் இவ் திணைக்களங்களில் கீழ் உள்ள சில நிறுவனங்களும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.
இந்த கணக்கறிக்கையில் நடைபெற்றுள்ள ஊழல்கள், நிதிமோசடிகள், அதனை அதிகாரிகள் அரசியல் வாதிகள் கையாண்ட முறைமை தெளிவுபடுத்தி மக்களுக்கும் அமைச்சின் அதிகாரிகளுக்கும் தெளிவூட்டி புதிய அமைச்சின் நிதி, அரச நடவடிக்கை எந்த வகையில் கையாழ்வது பற்றியும் தெளிவுபடுத்தப்படும். அத்துடன் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அதிகாரிகளது கூட்டத்தில் தெரிவித்தார்.