பொத்துவில் நிருபர் இர்ஸாத் ஜமால் (M.A) -
மக்களின் அபிலாஷைகளையும், உரிமைகளையும் பெற்றுக்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் தோற்றம் பெறுகின்றன. கட்சிகளின் நோக்கங்கள் வலுவிழந்ததாக அல்லது, இலக்கை நோக்கிய பாதையை மாற்றி அரசியலில் பயணம் செய்கின்ற போது மாற்றுக் கட்சிகள், புதிய அரசியல் முகங்கள் தோற்றம் பெருகின்றன. அதை சமூகத்தில் தடுக்கவும் முடியாது.
இவ்வாறு கடந்த 22ம் திகதி பொத்துவில் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் அ.இ.மு.வா.முன்னணியின் அம்பாறை மாவட்ட கிளையால் பொத்துவில் கஷ்ட பிரதேச மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு நிகழ்வில் கலந்து கொண்ட சிரேஷ்ட சட்டத்தரணி ஆதலெப்பை தனது உரையில் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இன்று முஸ்லிம்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற பல கட்சிகள் இருக்கின்றது. துரஷ்டவிசமாக கட்சிகளுக்கிடையில் கசப்புத்தன்மை, சன்டை, விட்டுக்கொடுப்பின்மை போன்றசர்சைகள் காணப்படுகின்றது. ஒரு கட்சியை சார்நதவர் அடுத்த கட்சிக்காரரின் உயிரையும், உடைமையையும்பறிக்கும் சமூகம் எம்மத்தியில் உருவாகியுள்ளது.
மனதில் கசப்புத்தன்மையினை வைத்துக்கொண்டு மரண வீடுகளிலும், அரச வைபவங்களிலும், நிகழ்வுகளிலும் அரசியல் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் ஒற்றுமை வேசம் போடுகின்றனர். இந்த கலாச்சாரம் கலையப்பட்டு யெதார்த்தமான ஒற்றுமையின் பால் முஸ்லிம் அரசியல் தலைமைகளும், கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.
கடந்த தேர்தலில் நாம் விதைத்த ஒற்றுமையின் பலனை அணுபவித்து கொண்டிருக்கின்றோம். இது நமது சமூக்திற்கு ஒற்றுமையால் கிடைத்த மிகப்பெரிய அதிஷ்டம். எனவே கட்சி பேதங்களை மறந்து மரன வீடுகளில் மாத்திரம் சமூகத்திற்கா ஒற்றுமை பட்டவர்கள் போன்று தங்களை காட்டிக்கொள்வதை தவிர்த்து, எதார்த்தமாக எம் சமூகத்திற்காய் ஒன்று சேர வேண்டும்.