கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் பள்ளிவாயலில் ஆற்றிய உரை தொடர்பில் பொது ஜன ஐக்கிய முன்னணி காத்தான்குடி மத்தியகுழு
மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
பொது ஜன ஐக்கிய முன்னணி
ரெலிகொம் வீதி காத்தான்குடி-01
அல்ஹாஜ் ஷிப்லி பாறுக்
கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
அவர்கட்கு.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
பொது ஜன ஐக்கிய முன்னணியின் காத்தான்குடி மத்தியகுழு தங்களுக்கு விடுக்கும் பணிவான வேண்டுகோள் என்னவெனில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் 09.01.2015 வெள்ளிக்கிழமை அன்று அழ்ழாஹ்வின் புனித இல்லமான ஜாமிஉழ்ழாபிரீன் ஜும்மா பள்ளிவாயலில் நடை பெற்ற ஜும்மா தொழுகையின் பின்னர் மிம்பருக்கு அருகாமையில் நின்று கொண்டு நீங்கள் ஆற்றிய உரையின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு காத்தான்குடியில் 4000 க்குட்பட்ட வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டதாக கூறினீர்கள்.
இந்த கணக்கு விபரத்தை எந்த அடிப்படையில் நீங்கள் மக்களுக்கு கூறினீர்கள். வாக்கெண்ணும் நிலையத்தின் மூலமாகவா? அல்லது தேர்தல் திணைக்களத்தின் மூலமாக பெறப்பட்ட உத்தியோகபூர்வமான உண்மையான தகவலா? அல்லது உங்களது கற்பனையில் உதித்த உத்தேச அறிக்கையா? என்பதனை காத்தான்குடி மக்களுக்கு ஆதாரத்துடன் தெளிவு படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் பொய்யான தகவலை கூறி மக்களை பிழையாக வழிநடாத்தி உள்ளீர்கள் என்பதாக நாங்கள் கருதுகின்றோம்.
நீங்கள் படித்த ஒரு பொறியியலாளர் என்பதனை மக்கள் அறிவார்கள். எமதூர் மக்களை அறிவற்றவர்களாக நினைத்து இவ்வாறானதொரு பொய்யான, பிழையான தகவலை இறையில்லத்தில் வைத்துக் கூறியுள்ளீர்கள்.
எனவே இதற்கான விளக்கத்தினை ஒருவார காலத்துக்குள் உண்மையான ஆதாரங்களுடன் மக்களுக்கு தெரியப் படுத்துமாறு அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம். நன்றி.
ஜஸாக்கு முள்ளாஹு ஹைறன்.
இப்படிக்கு -மத்தியகுழு
பொது ஜன ஐக்கிய முன்னணி
காத்தான்குடி
பிரதி: காத்தான்குடி பிரதேச ஊடகவியலாளர்கள்.
%2Bcopy.jpg)