பழுலுல்லாஹ் பர்ஹான்-
சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், வக்பு,அழைப்பு மற்றும் வழிகாட்டலுக்கான அமைச்சும் ,காத்தான்குடியில் இயங்கும் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியும் இணைந்து உலமாக்கள் ,கதீப்மார்களுக்கான இரண்டு நாள் தலைமைத்துவப் பயிற்சிக் கருத்தரங்கொன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் தலைவரும்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இக் கருத்தரங்கு தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்;
இலங்கையின் நாலா புறங்களிலிருந்தும் சுமார் 500 உலமாக்கள் கலந்து கொள்ளும் இக் கருத்தரங்கின் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை மறுதினம் 31-01-2015 சனிக்கிழமை காலை 8.45 மணி தொடக்கம் காலை 10.15 மணி வரை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திலும் இறுதி வைபவம் 01-02-2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.மணி தொடக்கம் மாலை 6.மணி வரை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திலும் நடைபெறுமென அவர் மேலும் தெரிவித்தார்.
