குருநாகலில் பிரான்ஸில் வெளிவரும் பத்திரிகைக்கும் கார்டூனுக்கும் எதிராக ஆர்ப்பாட்டம்-படங்கள்

இக்பால் அலி-

லகளாவிய முஸ்லிம்களை நையாண்டி பண்ணி பிரான்ஸில் வெளிவரும் சார்லி ஹப்டோ பத்திரிகைக்கும் அதில் வெளியான கார்டூன் எதிராகவும் கண்டித்து இன்று குருநாகல் நகரிலுள்ள பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் முன்னால் ஜும்ஆத் தொழுகைக்குப் பிற்பாடு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குருநாகல் பஸார் வாலிப சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மதங்களை நிந்திக்காதே, பிரான்ஸ் நாட்டுப் பொருட்களைத் தடை செய், ஊடக சுதந்திரத்தை இழிவு படுத்தாதே, அல்லாஹ். நபி (ஸல்) அவர்களை இழிபடுத்துபவர்களை நாசம் பண்ணிவிடு போன்ற பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் கைகளில் ஏந்தி கோசமெழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாவத்தகம பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கட்சித் தலைவர் முஹமட் ரிபாழ், நசார் ஹாஜியார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பிரான்ஸ் நாட்டுக்கு இது தொடர்பாக மகஜர் கையளிக்கவுள்ளதாகவும் பிரான்ஸ் கொடியை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -