அ.றஹ்மான்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் மாண்புமிகு நகர அபிவிருத்தி,நீர்வழங்கள் மற்றும் வடிக்காலமைப்பு சபை அமைச்சர் அல்ஹாஜ் ரஊப் ஹக்கீம் அவர்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் மான்புமிகு சுகாதார இராஜாங்க அமைச்சருமான அல்ஹாஜ் எம்.ரி.ஹஸன் அலி அவர்களையும் அம்பாரை மாவட்ட முஸ்லிம் சமூகம் மனமுவர்ந்து வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (2015.01.31)ஆம் திகதி பிற்பகல் 2.00 மணியளவில் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்குற்பட்ட பிரதேசங்களில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வின் போது அட்டாளைச்சேனை,பாலமுனை ஒலுவில் கிராமங்கள் ஊடாக வாகனப் பவனியாக வலம் வருதலும் அட்டாளைச்சேனை கோணாவத்தை ஓ.பி.ஏ வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோணாவத்தை காரியாலத்தை திறந்து வைக்கும் நிகழ்வும்,பாலமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் மாவட்டக்காரியாலத்தையும் திறந்துவைக்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளும் இக்குதூகல விழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அனைத்து போராளிகளையும் இன்முகத்தோடு அழைக்கின்றோம்.

