ஓட்டமாவடி ஜமாத் இஸ்லாமியினால் இலவச மருத்துவ முகாம்!

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-

லங்கை ஜமாத் இஸ்லாமியின் ஓட்டமாவடி ஜமாத் மன்றத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இலவச மருத்துவ முகாம் இன்று 07.12.2014 ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

தொடர்ந்தேர்ச்சியாக பெய்துவருகின்ற அடைமழை காரணமாக கல்குடா பிரதேசத்தில் வைரஸ் நோய்தொற்றுக்கள் அடங்கலாக பல்வேறு நோய்களுக்கு பொதுமக்கள் முகம் கொடுத்துவருவதினை கருத்தில் கொண்ட இலங்கை ஜமாத் இஸ்லாமியின் ஓட்டமாவடி ஜமாத் மன்றமானது திடீர் நோய் தொற்றுக்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் முகமாக செரண்டிப் நிவாரண அபிவிருத்தி நிதியத்தின் உதவியின் மூலம் முற்றிலும் இலவசமாக அத்தியவசிய மருந்துகளை கொள்வனவு செய்து வெற்றிகரமாக இலவச மருத்துவ முகாமினை நடாத்தியது.

மேலும் இந்த மருத்துவ முகாமில் கண் வெண்படலத்தில் குறைபாடுள்ளவர்களுக்கு இலவச பரிசோதனையின் மூலம் குறைபாடுள்ளவர்கள் இனங்காணப்பட்டு புத்தளதில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுவதுடன், அனைத்து வெளிநோயாளர்களுக்கும் உடநடியாக இலவச மருந்துகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அத்தோடு ஓட்டமாவடி ஜமத் இஸ்லாமியின் பராமரிப்பில் உள்ள 75 அனாதை சிறுவர்களுக்கு அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் இங்கு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
.
இந்த மருத்துவ முகாமுக்காக தங்களது பெருமதிமிக்க கலாத்தை தியாகம் செய்து வருகை தந்திருந்த கொழும்பு நாரேகேபிட்டிய பொலிஸ் வைத்தியசாலையில் கடமைபுரியும் வைத்தியர் SM.பரீட் , ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் கடைமை புரியும் வைத்தியர் AS.அஜீமுஸான் (MD), கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலையில் கடைமை புரியும் வைத்தியர் AM.அஸ்ஹர் (MBBS), வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கடமைபுரியும் வைத்தியர்களான MB.காலித் (MBBS),SI.மர்சூக் (MD), HM.றியால்(MBBS), நஜீப்கான் (ஓட்டமாவடி வைத்திய அதிகாரி), MH.ஜசீல் (MBBS), ஜானாப் / ஜனாபா நியாஸ் (MBBS), MBM.பிர்னாஸ் (MBBS), கிழக்கு பல்கலை கழகத்தின் இறுதிவருட வைத்திய பீட மாணவன் MIM.இல்ஹாம்(MBBS) ஆகிய வைத்தியர்களுக்கும், மருந்தகத்திலும், ஏனைய தேவைகளுக்கும் ஒத்தாசை வழங்கிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஓட்டமாவடி ஜமாத் இஸ்லாமி மன்றம் தனது நன்றியினை தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைவதாக தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :