த.நவோஜ்-
அகில இலங்கை இந்து மாமன்றம் ஊடாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினர் நடாத்தும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் நினைவு தினம் சனிக்கிழமை மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நல்லூர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி, அகில இலங்கை இந்து மாமன்ற தலைவர் கந்தையா நீலகண்டன், கிழக்குப் பல்கலைக் கழக முதுநிலை விரிவுரையாளர் ச.முகுந்தன், கிழக்குப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், இந்துநாகரீக துறை தலைவருமான திருமதி.சாந்தி கேசவன், கொழும்பு கல்வி வலய ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் திருமதி.ஹேமா சண்முகசர்மா, அகில இலங்கை இந்து மாமன்ற பொதுச் செயலாளர் மு.கதிர்காமநாதன், அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் சி.தனபாலா, விஸ்வ ஹிந்துப் பரிசத்தின் வர்த்தகப் பிரதி நிதியும், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் துணைத் தலைவருமான சி.அருளானந்தம், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி முதல்வர் எஸ்.லசீசன், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், ஆலய தர்மஹர்த்தாக்கள், பேரவையின் பிரதிநிதிகள், இந்து அமைப்பு பிரதிநிதிகள், இந்து சமய ஆர்வாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இங்கு குத்து விளக்கேற்றல், நந்திக் கொடி ஏற்றல் என்பன நல்லூர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமியால் ஏற்றி வைக்கப்பட்டதோடு, ஆறுமுகநாவலருக்கான பூசையை பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் நடாத்தினார்.
இந்நிகழ்வின் போது மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் அகில இலங்கை இந்து மாமன்ற தலைவர் கந்தையா நீலகண்டனின் சேவையைப் பாராட்டி சைவ மாமணி எனும் பட்டம் வழங்கப்பட்டதுடன், மற்றும் விஸ்வ ஹிந்துப் பரிசத்தின் வர்த்தகப் பிரதி நிதியும், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் துணைத் தலைவருமான சி.அருளானந்தத்தின் சேவையைப் பாராட்டி சைவத் தொண்டன் எனும் பட்டம் வழங்கி பொன்னாடை போர்த்தி மற்றும் தலைப்பாகை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு வந்தாறுமூலை அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கல நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன், ஆறுமுகநாவலர் பற்றி நல்லூர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி, அகில இலங்கை இந்து மாமன்ற தலைவர் கந்தையா நீலகண்டன், கிழக்குப் பல்கலைக் கழக முதுநிலை விரிவுரையாளர் ச.முகுந்தன், கிழக்குப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், இந்துநாகரீக துறை தலைவருமான திருமதி.சாந்தி கேசவன், கொழும்பு கல்வி வலய ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் திருமதி.ஹேமா சண்முகசர்மா, கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி முதல்வர் எஸ்.லசீசன் ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றினர்.
மேலும் இதன்போது மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன், பேரவை பொதுச் செயலாளர் சா.மதிசுதன், பொருளாளர் ந.புவனசுந்தரம் ஆகியோரின் சேவையைப் பாராட்டி அகில இலங்கை இந்து மாமன்ற தலைவர் கந்தையா நீலகண்டனால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு சிறப்புரை வழங்கிய அனைவரையும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை மற்றும் அகில இலங்கை இந்து மாமன்றம் ஆகியோர் பொன்னாடை போர்த்தியும் மற்றும் மாலை அணிவித்து கௌரவித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment