அஸ்ரப் ஏ சமத்-
அம்பாறை மாவட்டத்தின் கரையோரமாவட்ட ஜ.தே.கட்சி அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பிணர் எஸ்.எஸ்.பி மஜீட் அவர்களின் ஊடக அறிக்கை.
முஸ்லீம் தலைவர்கள் இறுதிக்கட்டத்தில் பொதுவேற்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க முடிவெடுப்பதற்கு முன் இந்த நாட்டு மக்கள் குடும்ப ஆட்சி நடாத்தும் ஜனாதிபதியை மாற்றும் முடிபை இயற்கையாகவே ஏற்கனவே எடுத்துவிட்டார்கள். அதிலும் முஸ்லீம் சமுகமும் முடிபு எடுத்துவிட்டது.
இப்போது எதிர்க்கட்சி பொதுவேட்பாளருக்கு ஆதரவுக்கு எந்தவொரு முஸ்லீம் தலைவரும் எதையும் கூறவேண்டிய அவசியமில்லை. என முன்னாள் பாரளுமன்ற உறுப்பிணரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், முன்னாள் மாகாணசபை உறுப்பிணர் தற்பொழுது அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களின் ஜ.தே.கட்சியின் அமைப்பாளராக பதவி வகிக்கும் அப்துல் மஜீட் மேற்கண்டவாறு தெறிவித்துள்ளார்.
மஜீடின் ஊடக அறிக்கையில் மேலும் தகவல் தருகையில்;
முஸ்லீம்கள் கடந்த காலங்களில் கண்ட அனுபவங்கள் மேற்படி முடிபை தீர்க்கத்தனமாக எடுத்துள்ளனர். குறிப்பாக முஸ்லீம்களின் உணவு, உடை,வாழ்வு, வணக்கம், இருப்பு போன்றவற்றிக்கு இந்த அரசின் நிகழ்ச்சி நிரலில் மக்கள் அனுபவத்தையும் கஸ்டத்தையும் உணர்ந்தார்கள் அதன் விளiவே இந்த முடிபுக்கு காரணமாக அமைந்தது.
இப்போதுதான் முஸ்லீம் தலைமைத்துவம் மக்களோடு மக்களாக நணையப் பார்க்கின்றது. பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்குபவர்கள் பொதுவேட்பாளர் கொழும்பு விகாரமாகதேவி பூங்காவில் கையொழுத்திடும்போது வந்து கையெழுத்திட்டு பங்களராக இருந்திருக்க வேண்டும்.
இப்போதுதான் தலைவர்கள் வருவது முஸ்லீம்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவாக அல்ல தலைமைத்துவத்தையும், பதவிகளையையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமெனறா? இணையவருகின்றனர். என கேட்க விரும்புவதாக அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment