அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் உவைஸின் முயற்சியால் கொங்கிறீட் வீதி அமைப்பு





அ.றஹ்மான்-ட்டாளைச்சேனை 12ஆம் பிரிவு நூர் பள்ளிவாசல் குறுக்கு வீதி கொங்கிரீட் வீதியாக புனரமைக்கும் பணி இன்று அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் சோபர் விளையாட்டுக்கழகத்தின் தலைவருமான ஏ.எஸ்.எம்.உவைஸ் தலைமையில் இடம்பெற்றது.

மகிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் பொருளாதார அமைச்சின் நிதியில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த நூர் பள்ளி குறுக்கு வீதியை புனரமைக்கும்படி பிரதேச சபை உறுப்பினர் உவைஸ் விடுத்த கோரிக்கைக்கு அமைய  இவ்வீதியின் ஆரம்ப வேலை இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அம்பாரை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் மற்றும் கோணாவத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கிளைக்குழு செயலாளர் எஸ்.ஆப்தின் மற்றும் பொதுமக்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு பாதையின் வேலையை ஆரம்பித்து வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :