பொத்துவில் ஆர்.எம்.நகருக்கு புதிய பாடசாலைக்கான அனுமதி!

எம்.ஏ. தாஜகான்-

பொத்துவில் ஆர்.எம். நகர் பகுதிக்கான புதிய பாடசாலைக்கான அனுமதியினை கிழக்கு மாகாண கல்வி அமைச்சு 2015.01.01 இலிருந்து ஆரம்பிப்பதற்கான அனுமதியினை அளித்துள்ளது. இப் பாடசாலை பொத்துவில் உப வலயத்திற்கான 19 ஆவது பாடசாலையாகும்.

பொத்துவில் மத்திய கல்லூரி ஆயிரம் பாடசாலை திட்டத்தில் உள்வாங்கப் பட்டதன் பின்னர் அப்பாடசாலையில் ஆரம்பப் பிரிவு வகுப்புக்கள் இல்லாமல் ஆனது. இதனால் பொத்துவில் 27 பகுதி வாழ் மக்களின் பிள்ளைகள் ஆரம்பப் பிரிவு கல்வி மேன்பாட்டுக்காக வேண்டி தூர பிரதேசங்களுக்கு செல்ல வேண்டின. 

இதனைக் கருத்திற் கொண்டு அப்பகுதியில் புதிய ஆரம்பப் பாடசாலையினை அமைப்பதற்கான முயற்சியினை பொத்துவில் பிரதேச சபையின் ஏற்பாட்டில் 
கல்விச் சமூகம் முன்னெடுத்துச் சென்றன.

இதன் நிமித்தம் சுமார் இரண்டரை வருடங்களுக்குப் பின்னர் மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி நிசாம் அவர்களின் பணிப்புரையின் கீழ் பாடசாலைக்கான அனுமதி கிடைத்துள்ளது. 

பாடசாலைக்கான பெயர் கமு/அக்/பொத்துவில் ஒஸ்மானியா கனிஸ்ட வித்தியாலயமாகும் இப்பாடசாலைக்கான அதிபராக ஏ.எல். அபுல் ஹஸன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 

இப்பாடசாலை அனுமதியினை வழங்கிய மாகாண கல்விப் பணிப்பாளருக்கு பொத்துவில் பிரதேச சபை மற்றும் பொத்துவில் கல்விக்குழுவினர் நன்றிகளை தெரிவிக்கின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :