தேசிய நீர்ப்பாசன வாரத்தை முன்னிட்டு மத்திய நீர்ப்பாசனத்துடன் இணைந்து மாகாண நீர்ப்பாசன அமைச்சு பொத்துவில் பிரதேசத்தில் கடந்த காலங்களில் எல்லையற்ற சேவைகளை செய்து வருகின்றது. அந்த வகையில் கடந்த 2014.09.02ம் திகதி கௌரவ உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ எம்.எஸ்.உதுமாலெவ்வை அவர்களினாலும் ஆரம்பித்து வைக்கப்பட்ட பொத்துவில் துவ்வையாறு கட்டம் -1,2,3 ஆகியவற்றில் உள்ள தடைகளை அகற்றி சுத்தம் செய்தல் வேலைத்திட்டம் தற்போது முடிவுறும் தருவாயில் உள்ளது.
அதாவது, காலா காலமாக சவாளை, ஆத்திமுனை, சர்வோதயபுரம், மைலகாஸ் தோட்டப் பகுதி மக்கள் நவம்பர், டிசம்பர் காலப்பகுதிகளில் பாரிய வெள்ள அனார்த்தத்திற்கு அகப்பட்டு பொருளாதாரம், வாழ்வாதாரம் போன்றவைகளை இழந்து இடம்;பெயர வேண்டிய கட்டத்திற்கு உள்ளாகின்றனர். ஆனால் இவ்வருடம் குறித்த வேலைத்திட்டத்pன் மூலம் மக்களின் நீண்ட கால கஷ;டம் நிவர்த்தியடைந்துள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்களிடம் வினவிய போது பல ஆண்டுகளாக நாங்கள் இவ் வெள்ள அனார்த்தத்திற்கு உள்ளாகி தங்களது உடமைகளை இழந்து சில காலங்கள் அகதிகளாக இடம்பெயரந்த மக்களாக இருந்தோம், ஆனால் இவ்வருடம் அவ்வாறான சுமையிலிருந்து விலகி தங்களது சொந்த இடங்களில் நிம்மதியாக வாழ்கின்றோம். கௌரவ உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் அவர்களின் பொத்துவில் பிரதேச இணைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான கௌரவ ஏ.பதுர்கான ஆசிரியரிடம் நாங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அமைச்சர் உதுமாலெவ்வை அவர்களின் அளப்பெரிய சேவையின் சின்னமாக இவ்வேலைத்திட்டம் காணப்படுகின்றது. இரவு பகல் இல்லாமல் அடிக்கடி பார்வவையிட்டு எங்களை பாரிய அனர்த்தத்திலிருந்து பாதுகாத்த அமைச்சர் உட்பட் குழுவினருக்கு நாங்கள் மாற்று உபகாரம் ஏது செய்தாலும் இவ்வுலகில் ஈடாகாது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment