முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஜனாதிபதி மஹிந்தவுக்கிடையிலான சந்திப்பு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னணி பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அலரி மாளிகையில் நேற்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் சில தினங்களில் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தலைமையிலான குழுவுடன் மீண்டும் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. இச்சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ள பிரதான நிபந்தனைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அழைப்பின் பேரிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகமும் எம்;பியுமான ஹசன் அலி மற்றும் கல்முனை மேயர் நிசாம் காரியப்பர் ஆகியோரும் பங்கேற்றனர்.

ஜனாதிபதியுடன், அமைச்சர்களான அநுர பிரியதர்சன யாப்பா, பசில் ராஜபக்ஷமற்றும் டலஸ் அழகபெரும ஆகியோரும் பங்கேற்றனர்.

அண்மையில் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தலைமையிலான குழுவுடன் சந்திப்பு இடம்பெற்று சில தினங்களின் பின்னர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மௌனமாக இருக்கப் போவதாக தீர்மானித்ததாக அதன் உயர் பீட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் தெரிவித்திருந்த நிலையில் நேற்று ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :