ஜனாதிபதி யின் கரங்க ளைப்பலப்ப டுத்தவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை மேலும் வலுவுள்ளதாக்கவுமே தான் தனது பாராளுமன்றப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்து தியாம் மேற்கொண்டதாக முன்னாள் எம்.பி ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார்.
நான் எனது எம்.பி பதவியை கட்சிக்காக விட்டுக் கொடுத்தேனே தவிரவும் யாரும் என்னை வற்புறுத்தி இராஜினாமாச் செய்ய வைக்கவில்லை. அத்துடன் நான் கட்சி மீது வெறுப்படைந்தோ, பொதுபல சேனாவைக் கண்டோ இராஜினாமாச் செய்யவில்லை எனவும் அஸ்வர் அவர்கள் தெரிவித்தார்.
சிலர் தனது இராஜினாமாவை வைத்து தமது இஷ்டப்படி கதைகளைக் கட்டி வருவதாகத் தெரிவித்த அவர் இதுவே உண்மை எனவும் தெளிவுபடுத்தினார்.
இன்று இந்நாட்டில் முஸ்லிம் மக்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் வாழ வழிசமைத்தவர் ஜனாதிபதி மஹிந்தவே. இந்நாட்டு முஸ்லிம்களின் பாதுகாப்பை அவர் உறுதி செய்துள்ளார். வானொலியில் ஐவேளையும் பாட்டு ஒலிக்கிறது. சர்வதேசத்தில் முஸ்லிம் நாடுகள் சகலதுமே அவருக்குப் பக்கபலமாக இருக்கின்றன எனவும் அஸ்வர் அவர்கள் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment