ஜனாதிபதி தேர்தல் வன்முறைகள் ஆரம்பம்!

களுத்துறை, குருணாகல் மோதல்களில்  இருவருக்கு காயம்: வாகனங்கள் சேதம்!

ஜனாதிபதி தேர்தலின் முதலாவது வன்முறை களுத்துறை மக்கோன சந்தியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்து ஆதரவாளர்களால் களுத்துறை மக்கோன சந்தியில் நேற்று மாலை பட்டாசுகள் கொளுத்தப்பட்டன.

அந்தச் சந்தர்ப்பத்தில் இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பேருவளை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி முன்னாள் உறுப்பினர் படுகாயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் சமில ரணசிங்க என்பவரே காயமடைந்தவராவார். இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.

இதேவேளை, குருணாகல் மாவத்தகம பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்குமிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். பல வாகனங்களுக்கும் சேதமேற்பட்டுள்ளன.

தமிழில்: ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
சிங்களத்தில்: நெத் எப்.எம்/ அததெரண
படம்: லங்கா தீப
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :