தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் திங்கட்கிழமை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டம் ஒன்று எதிர்வரும் திங்கட் கிழமை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் இந்த சந்திப்பு நடைபெறும்.
இதன் போது ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றி பொது மக்களை மீள்குடியேற்றல், சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை ஆகிய மூன்று கோரிக்கைகளுக்கும் சாதகமான உறுதிமொழியை வழங்கும் வேட்பாளருக்கு எதிர்வரும் தேர்தலில் ஆதரவளிக்கப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் ஏலவே தெரிவித்திருந்தார்.
இதன் அடிப்படையில் விரிவாக கலந்துரையாடியே தமது இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று ஊடகம் ஒன்றுக்கு கூறி இருந்தார்.
இந்த விடயத்தில் அவசரப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்பட மாட்டாது என்பதைவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவினை தெரிவிப்பது என்பது தொடர்பாக அறிவிக்கப்படாத நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அவசர கூட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றர். போராளிகள் ஆவலுடன் முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்தை எதிர்பார்த்த கொண்டு இருப்பதும் குறிப்படத்தக்கது.

0 comments :
Post a Comment