நிஸ்மி, அக்கரைப்பற்று-
ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட படி 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியினால் செய்கை பண்ணப்படாத மற்றும் வரட்சியினால் நெற்பயிர் பாதிக்கப்பட்ட அம்பாரை மாவட்ட காணி உரிமையாளர்களுக்கு விதை நெல் அல்லது நிதி உதவி வழங்கும் நடவடிக்கைகள் அம்பாரை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது சம்பந்தமாக விவசாயிகளுக்கு விளக்கமளிப்பதற்காக அக்கரைப்பற்று –மேற்கு கமநல சேவை நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவம் நேற்று (09) கமநல சேவை நிலையத்தில் அக்கரைப்பற்று-மேற்கு கமநல சேவைப் பிரிவு விவசாய அமைப்புக்களின் தலைவர் ஐ.எல்.சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.றாஸீக் கலந்து கொண்டதோடு, அதிதிகளாக வழங்குவதையும், அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் யூ.எல்.ஏ.ஹஸன், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.அமீர், விவசாய அமைப்புக்களி; பிரதி நிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். தவிசாளர் எம்.ஏ.றாஸீக், உதவி திட்டமிடல் பணிப்பாளர் யூ.எல்.ஏ.ஹஸன்,விவசாய அமைப்புக்களின் தலைவர் ஐ.எல்.சம்சுதீன் ஆகியோர் வரட்சி நிவாரண விண்ணப்பப் படிவங்களை விவசாயிகளுக்கு வழங்கினார்கள்.-
.jpg)
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment