சாய்ந்தமருது மக்கள் தொடர்ச்சியாக முஸ்லிம் காங்கிரசக்கு வாக்களித்தும் அம்மக்களின் தோணா ஆற்றுப்பிரச்சினை கூட இன்னமும் தீராமல் இருப்பதன் மூலம் சாய்ந்தமருது மக்கள் முஸ்லிம் காங்கிரசால் மிக மோசமாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என்பதைக்காட்டுகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருது தோணா சம்பந்தமாக கட்சியின் அமைப்பாளர் ரிசாத் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்ற ஆதரவாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். இது பற்றி அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது,
கல்முனைக்கென முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர், மாநகர சபை, இவர்களின் தலைவர்கள் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் என ஒரு பட்டாளமே இருந்தும் சாய்ந்தமருது தோணா இன்னமும் திருத்தப்படாமை கண்டிக்கத்தக்கதாகும்.
பேரின கட்சிகளில் தங்கியிருந்தால் முஸ்லிம் சமூகத்துக்கான அடிப்படை உரிமைகளை பெற முடியாது என்பதற்காகவே முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரஸ், ரிசாத் காங்கிரஸ், அதாவுள்ளா காங்கிரஸ் என்ற கட்சிகளுக்கு தொடர்ந்தும் வாக்களித்து வருகிறார்கள். அதிலும் கல்முனை என்பது இன்னமும் முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக, துர்நாற்றம் வீசும் மிக மோசமான கோட்டையாக இருந்து கொண்டிருக்கிறது. தமது கட்சி தமக்கு நல்ல வாழ்வை கொண்டு தரும் என இம்மக்கள் தொடர்ந்தும் வாக்களித்தும் எமாற்றமும்;, அவமானங்களையுமே சந்தித்து வருகின்றனர்.
அதிலும் சாய்ந்தமருது மக்களில் 98 வீதமானோர் கடந்த காலங்களில் மு. காவுக்கே வாக்களித்தனர். இருந்தும் சாய்ந்தமருதை அசிங்கமாக்கிக்கொண்டிருக்கும் தோணாவை சரியான முறையில் இன்னமும் திருத்த முடியாத செயலாற்றுத்திறண் அற்றவர்களாக இக்கட்சியினர் உள்ளனர்.
காலா காலமாக சாய்ந்தமருதை வெள்ளப்பெருக்கத்தில் இருந்து விடுவித்து வரும் சாய்ந்தமருது தோணா சுனாமியின் பின்னரும் அண்மையில்; அம்பாறை மாவட்ட கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அனுசரணையுடனும்; சுத்தம் செய்யப்பட்டது. இறுதி நேரத்தில் அம்பாறை மாவட்ட கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் சுத்தம் செய்யப்பட்ட இத்தோணா திட்டமிட்ட அடிப்படையில் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதும் இதனை பயன்படுத்தி அரசியல்வாதிகள் தோணாவுக்கான கொந்தராத்து என்ற பெயரில் கொள்ளையடிப்பதாகவும் இப்பிராந்தியத்தில் வாழும் மக்கள் தெரிவிக்கிறார்கள்.
அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியாக இருந்தும் அரசின் அனைத்து வளங்களையும் அனுபவிக்கும் அமைச்சர்களை தலைவர்களாகக்கொண்ட ஒரு கட்சியினால் இந்தத்தோiணாவைக்கூட சரியான முறையில் பூ10ரணப்படுத்த முடியவில்லை என்றால் இந்தக்கட்சிக்கு சாநய்த்தமருது மக்கள் இன்னமும் வாக்களிக்கத்தான் வேண்டுமா என்பதை அம்மக்கள் சிந்திக்க வேண்டும். மக்கள் விழிப்படையாத வரை சுயநல ஏமாற்று முஸ்லிம் கட்சிகளால் மக்கள் ஏமாறுவது தவிர்க்க முடியாததாகும். ஆகவே கல்முனை தலைமையை கொண்ட உலமா கட்சியை சாய்ந்தமருது மக்கள் அதரிப்பதன் மூலம் ஊழலற்ற நல்லாட்சியை கல்முனையில் ஏற்படுத்தி சாய்ந்தமருது மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்றார்.
.jpg)
0 comments :
Post a Comment