கலாசார அலுவல்கள் திணைக்களமும்; பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் பிரதேச கலாசார விழா!

  எம்.ஏ. தாஜகான்-

லாசார அலுவல்கள் திணைக்களமும்; பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் பிரதேச கலாசார விழா  பொத்துவில் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று 2014.11.21 பிரதேச செயலக  கேட்போர் கூடத்தில் கலாசார உத்தியோகத்தர் ஏ.எம். தௌபீக் தலைமையில் இடம் பெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம். முசர்ரத்  அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார் பிரதேச செயலாளர் தனது உரையில் : 

பின்வருமாறு குறிப்பிட்டார் 

மனிதனை புனிதனாக மாற்றும் ஒரு சக்தி கலைக்குள்ளது. மனிதனில் ஏற்படுகின்ற மன அழுத்தத்தை  போக்குவதற்காகவே கலைகள் உருவாக்கப்பட்டுள்ளது.. அந்த வகையில்தான் கலாசார நிகழ்வுகளும் தமது  பார்பரியங்களை மாத்திரம் வெளிப்படுத்தாது மனித மனங்களுக்கு அமைதியும்  புத்துணர்ச்சியினையும் அளிக்கின்றது. என்றார்.

இக்கலாசார நிகழ்வில் தமிழ் முஸ்லிம் மாணவர்களின் கலாசார நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.  பாடசாலை மட்ட மாணவர்களுக்குரிய போட்டியில் வெற்றியீட்டிய 35 மாணவர்களுக்கும் திறந்த  போட்டியில் வெற்றியீட்டிய திறந்த போட்டிற்குரிய 19 பேருக்கும் நிகழ்சியில்  பங்குபற்றிய 05 பேருக்குமான பெருமதியான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி  கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். தமீம்; பதிவாளர் எம்.எஸ்.எம். உவைஸ்  மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம். ஜௌபர் மற்றும் அதிபர்கள்  ஆசிரியர்கள் பிரதேச கலைஞர்கள் பெற்றோர்களும் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :