பழுலுல்லாஹ் பர்ஹான்-
'பசுமை நிறைந்த நாடு ஒளிமயமான எதிர்காலம்' தேசிய மர நடுகைத்திட்டத்தின் மூலம் இலங்கையின் வன வளத்தை அதிகரிக்கும் இலக்கை வெற்றிகொள்வோம் எனும் எனும் தொனிப்பொருளில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 69 வது பிறந்த தினத்தை முன்னிட்டு 15-11-2014 இன்று சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெறும் 'தயட்ட செவண' தேசிய மரநடுகை விழா மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இடம்பெற்றது.
இதற்கமைவாக காத்தான்குடி பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த தேசிய மரநடுகை விழா நிகழ்வு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.
இதன் போது சுப நேரம் காலை 10.41 மணிக்கு 'தயட்ட செவண' தேசிய மர நடுகை திட்டத்திற்கான முதலாவது மரத்தை காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர நட்டி வைத்தார்.
இந்நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி துஷார ஜெயலால்,குற்றத்த தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி மங்கல உட்பட ஆண்,பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் 'தயட்ட செவண' தேசிய மரம் நடுகை திட்டம் தொடர்பில் பொலிசாருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment