வாகரைப் பிரதேச சபையினால் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடத்திய பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும், பிரதேச சபையினால் வெளியிடப்படும் நெய்தல் சஞ்சிகையின் இரண்டாவது இதழ் வெளியீடும் நடைபெற்றது.
தேசிய வாசிப்பு மாதம் - 2014 இனை முன்னிட்டு, கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச சபையின் கீழ் இயங்கி வருகின்ற மாங்கேணி, வாகரை, கதிரவெளி பொது நூலகங்கள் பிரதேச சபையுடன் இணைந்து நடத்திய பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும், பிரதேச சபையினால் வெளியிடப்படும் 'நெய்தல்' சஞ்சிகையின் இரண்டாவது இதழ் வெளியீடும் கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச சபையின் செயலாளர் சி.இந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.
நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக வாகரை கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் செல்வி.இ.இராகுலநாயகி, கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா, வாகரை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பி.வி.கே.பாலித ஜயரட்ண, வாகரைப் பிரதேச உலக தரிசன நிறுவனத்தின் முகாமையாளர் பொனி ஜஸ்டின் வின்சன்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நெய்தல் இதழ் வெளியீடு இடம்பெற்ற போது இதழின் ஆசிரியரும், பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தருமான க.ஜெகதீஸ்வரன் பிரதேச சபை செயலாளர் சி.இந்திரகுமாருக்கு இதழின் முதல் பிரதியினை வழங்கி வைத்தார். மற்றும் ஏனைய அதிதிகளுக்கு செயலாளர் சி.இந்திரகுமாரால் இதழ் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலய மாணவிகளின் வரவேற்பு நடனம், பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலய மாணவியரின் கும்மி நடனம், வாகரை மகா வித்தியாலய மாணவியரின் பாரம்பரிய நடனம் என்பன இடம்பெற்றதோடு, மேல்பிரிவு மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற பால்ச்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் மாணவரின் பேச்சும் இடம்பெற்றது.
அத்தோடு வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும், அதிதிகளுக்கான நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment