சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஏற்பாட்டில் கல்முனை ஸாஹிரா வீரர்களுக்கு பாராட்டு







ஹாசிப் யாஸீன்-

சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஏற்பாட்டில் அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அகில இலங்கை சம்பியன் பட்டம் பெற்ற கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் வீரர்களை பாராட்டி கௌரவிக்கும் பெருவிழா சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில்நேற்று (09) இடம்பெற்றது.

சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றத்தின் தலைவர் அஸ்வான் சக்காப் மௌலானா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றஹ்மான், கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன், மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமையாளர் எச்.எல்.நஜிமுதீன், தொழிலதிபர்களான எம்.ஏ.எம்.பழீல், எம்.எச்.எம்.அலி ரஜாய், எம்.எச்.நாசர், எம்.ஐ.நளீம் உள்ளிட்ட பாடசாலை கிரிக்கெட் றஅணியின் வீரர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஸாஹிறா தேசிய பாடசாலை அகில இலங்கை சம்பியன் பட்டம் பெற பயிற்றுவித்த பாடசாலையின் விளையாட்டு ஆசிரியர் அலியார் பைசர், கிரிக்கெட் துறையின் வர்ணணையாளர் சாக்கிர் கரீம் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் வீரர்களுக்கும் நினைவுச் சின்னம், சான்;றிதழ் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :