ஹாசிப் யாஸீன்-
கல்முனை மாநகர சபை பிரதேசத்தில் பொது மக்களுக்கு சிறந்த முறையில் சுத்தமானதும்சுகாதாரமான உணவுகளை வழங்கும் நோக்கில் கல்முனை பிரதேசத்திலுள்ள உணவகங்கள்சுற்றி வளைக்கப்பட்டு திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி எம்.சீ.எம்.மாஹிர்தலைமையிலான ஜே.எம்.நிஸ்தார், ஏ.எம்.பாறூக், எம்.லத்தீப், ஏ.எல்.எம்.ஜெரீன் உள்ளிட்டபொது சுகாதார பரிசேதகர்கள் குழுவினரே இந்நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது கல்முனை பிரதேசத்திலுள்ள பிரல்யம் மிக்க உணவகங்களில் சுத்தம், சுகாதாரம்மற்றும் பாவனைக்குதவாத சோறு, பேக்கரி உணவு பண்டங்கள் என்பன கைப்பற்றப்பட்டுகல்முனை மாநகர வளாகத்தில் தீயிட்டு எரிக்கப்பட்டது.
இதன்போது சில உணவகங்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன்எதிர்காலத்தில் இவ்வாறான செயலில் ஈடுபடுவோருக்கு எதிராக வழக்கு தாக்கல்செய்யப்படவுள்ளதாகவும் கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரிஎம்.சீ.எம்.மாஹிர் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment