ஆப்புகுள் ஆழமாக இறுகி உள்ள இவர்கள் பெரும் எதிர் அணியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் வெளிப் படையான முறையில் ஆதரவு அளிக்க முடியாத இக்கட்டான சூழலில் உள்ளனர். ஆனால் தங்களது இருப்பிடங்களை தற்க வைத்துக் கொள்ளவும் மக்களை திருப்தி படுத்தவும் அவர்கள் முனைவார்கள் . இதன் வெளிப் பாடாக அவர்கள் எதிர் அணியின் வாக்குப் பலத்தைச் சரிக்க இவர்கள் ஜானதிபதித் தேர்தலில் குதிக்கக் கூடும். இது ஆளும் கட்சிக்கு மறைமுக ஆதரவு வழங்குவதாக அமையும்.
அவர்களின் கோசங்கள் திசை மாறி , முஸ்லிம்களே இம்முறை எமது சமூகத்தின் ஒற்றுமை வலுவை ஆளும் கட்சிக்கும், எதிர் கட்சிக்கும் நாங்கள் எல்லோரும் ஓன்று பட்டு எடுத்துக் காட்டுவோம். எதிர் வரும் பொதுத் தேர்தலில் இவ் ஒற்றுமைப்பலத்தை வைத்து இவர்களுக்கு பாடம் படிப்பிப்போம் , அத்துடன் எமது உரிமைகளையும் பெற்று எடுப்போம் என்பதாகஇருக்கும்.
இதனை இம் முஸ்லிம் சமூகம் இவர்களது கோசத்தை வேத வாக்காக நம்பி , ஷா , இதல்லவா ராஜ தந்திரம் என்று மூக்கில்விரல் வைத்து " வலது காலை எடுத்து வைத்து வாவா வாவா என்பதுடன் நாரேன் தக்பீர் முழங்க பழைய குருடி கதவைத் திறடி என்ற கதையாகவும் மாறலாம்.
இது எனது கணிப்பும் எதிர் பார்ப்பும் , சில வேளை வேறு எதிர் பாரத திருப்பமாகவும் அமையலாம் . இவ்வாறு சூழல் ஏற்படின் மக்கள் விழிப்புடன் செயல் படும் படி உங்களை எங்களது தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
.jpg)
0 comments :
Post a Comment