பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 24 இலட்சத்து 20 நாயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சுமார் 141 திவிநெகும பயனாளிகளுக்கு வாழ்வின் எழுச்சி (திவிநெகும) வாழ்வாதார அபிவிருத்தித்; திட்டத்தின் கீழ் தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 16-11-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரையம்பதி பிரதேச செயலகத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.
இதன் போது பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் 141 திவிநெகும பயனாளிகளுக்கு வாழ்வின் எழுச்சி (திவிநெகும) வாழ்வாதார அபிவிருத்தித்; திட்டத்தின் கீழ் தொழில் உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின்,ஆரையப்பதி பிரதேச வாழ்வின் எழுச்சி திவிநெகும பணிப்பாளர் என்.இராசலிங்கம் , ஆரையப்பதி பிரதேச வாழ்வின் எழுச்சி (திவிநெகும) தலைமையக முகாமையாளர் டி.தவேந்திரன் உட்பட வாழ்வின் எழுச்சி (திவிநெகும) உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு வாழ்வின் எழுச்சி (திவிநெகும) வாழ்வாதார அபிவிருத்தித்; திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள்,விவசாய உபகரணங்கள்,உணவு சமைப்பதற்கான உபகரணங்கள்,பாய் இழைப்பதற்கான பரித்திமனைகள் உட்பட பல்வேறு தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment