அட்டாளைச்சேனை கரடிக்குளப்பாலம் மூன்று கோடி ரூபா செலவில் அமைக்க நடவடிக்கை!

எம்.ஜே.எம். முஜாஹித்-

கிராமிய முன்னேற்றத்தில் பொன்வாயில் திறக்கும் சுபீட்சமான நாளையின் பொருட்டு  கிராமத்தையும் நகரத்தையும் இணைக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலம் நாடு  முழுவதும் செயற்படுத்தப்படும் கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் செயற்திட்டத்தின் கீழ் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  அவர்களின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு  கௌரவ கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.  உதுமாலெப்பை அவர்களின் வேண்டுதலில் பேரில் அட்டாளைச்சேனை கரடிக்குளப்பாலம்  மூன்று கோடி ரூபா செலவில் நாளை (18)ம் திகதி காலை 10.40 மணிக்கு அடிக்கல் நாட்டி  வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர், உள்ளுராட்சி  மாகாண சபைகள் அமைச்சர் கௌரவ ஏ.எல்.எம். அதாஉல்லா (பா.உ) அவர்கள் கலந்து  சிறப்பிக்கவுள்ளார். மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம்,  வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்  கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பனர் ஏ.எல்.எம். நஸீர்,  அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா உட்பட உயரதிகாரிகளும்  முக்கியஸ்தர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :