யார் இந்த பொதுவேட்பாளர் மைத்திரிப்பால சிறிசேன -விபரம்

ஓட்டமாவடி அஹமட் இர்சாட் மொஹமட் புஹாரி-

தேசிய அரசியலில் மட்டுமல்லாது சர்வதேசத்தின் பார்வையிலும் கூடிய கவனம் செலுத்தப்பட்டு வந்த இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளரை பற்றிய செய்திகள் இறுதியாக யாரும் எதிர்பார்க்காத விதமாக இப்போதைய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் மைத்திரிபால ஸ்ரீசேனவை ஒரு மித்த குரலில் எதிர்கட்சிகள் அனைத்தும் அறிவித்திருப்பதானது சமகால அரசியலில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமையும் என அரசியல் அவதானிகள் தங்களுடைய கருத்துக்களை பரவாலாக தெரிவித்து வருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கான கதைகள் முடுக்கி விடப்பட்ட காலத்திலிருந்து எதிர்கட்சிகள் அனைத்தும் பொது வேட்பாளரை தெரிவு செய்யும் விடயத்தில் நாளுக்கு நாள் பல அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்தமையும், ரணில், சந்திரிக்கா ,கரு, சோபித்த தேரர், சஜித் என பரவலாக பொது வேட்பாளர்களின் பெயர்கள் ஊடகங்களில் பேசப்பட்டு வந்தமையும், இறுதி நேரம் வரை தங்களுடைய முடிவினை வெளிப்படுத்தாமல் இருந்தமையினையும் வைத்து பார்க்கும் போது கடைசி நேரத்தில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால ஸ்ரீசேனவை பொது வேட்பாளராக அறிவித்திருப்பதானது பல கோணங்களில் பலம் பொருந்திய நிகழ்கால ஜனாதிபதி அதிமேதகு மஹிந்த ராஜபக்ஸவை

தோற்கடிப்தென்றால் அவருக்கு நிகரான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் சிரேஸ்ட உறுப்பினர்களின் செல்வாக்கினை பெற்றவரையும், நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்ற விவசாயிகள் மத்தியில் தனது பெயரினை பதித்துள்ள ஒருவரையுயே பொது வேட்பாளராக தேர்தல் களத்தில் இறக்க வேண்டும் என்ற ஒரு தூர நோக்கு முடிவினை எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து எடுத்திருப்பார்கள் என்பது சர்வசாதாரனமாக புலப்படுகின்றது.

இதன் அடிப்படையில் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள மைத்திரிபால ஸ்ரீசேனவைப்பற்றி பார்ப்போமானால் 1951ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் திகதி பொலன்னறுவையில் பிறந்த அவர், தனது பாடசாலைக் கல்வியை பொலன்னறுவை றோயல் கல்லூரியிலும், அதற்கு பிற்பாடு குண்டகசாலை விவசாய பாடசாலையில் விவசாயதுறை சம்பந்தமான கல்வியினையும் பூர்த்திசெய்துள்ளார். கிராம சேவையாளராக முதன்முதலில் அரசாங்க தொழிலினை பெற்றுக்கொண்ட இவர் 1971ம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னனியின் அரசாங்கத்துக் கெதிரான ஆயுதப்போராட்ட நடவடிக்கைகளின் போது சிறைவாசமும் அனுபவித்தார். பின்னர் இவருக்கும் இவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை என நிரூபிக்கப் பட்டிருந்தது.

1978ம் ஆண்டு இலங்கை சுதந்திர கட்சியில் இனைந்து கொண்ட மைத்திரிபால ஸ்ரீசேன அதேகாலப்பகுதியில் இலங்கை சுதந்திர கட்சியின் இளைஞர் அணியின் பொலன்னறுவை மாவட்டத்துக்கான அமைப்பாளராகவும், அதன்பிற்பாடு சுதந்திர கட்சியின் இளைஞர் அணிக்கான அகில இலங்கை ரீதியில் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டு சுதந்திரகட்சி சார்பாக 1979ம் ஆண்டு கியுபா நாட்டின் ஹவானா நகரில் நடைபெற்ற உலக இளைஞர் மாகாநாட்டில் கலந்து கொண்டார்.

இவ்வாறு சுதந்திர கட்சியில் தனது செல்வாக்கினையும், மக்கள் ஆதரவையும் அதிகரித்துக் கொண்ட மைத்திரிபால ஸ்ரீசேன 1989ம் ஆண்டு சுதந்திர கட்சியின் சார்பாக பாராளமன்ற தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிட்டு முதன் முதலாக பாரளமன்ற கதிரையில் உட்கார்ந்தார். அதைத் தொடர்ந்து 1994ம் ஆண்டு மீண்டும் பாராளமன்ற தேர்தலில் அதே மாவட்டத்தில் போட்டியிட்டு மாவட்டத்தின் அதிகப்படியான விருப்பு வாக்குகளையும் பெற்று முன்னாள் அதிமேதகு ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சியில் பிரதி நீர்ப்பாசனதுறை மாகாவலி அமைச்சராகவும் பதவிவகித்தார்.

இதே காலப்பகுதில் முன்னால் அதிமேதகு ஜனாதிபதி சந்திரிக்காவினதும் அரசாங்கத்தினதும் விசுவாசமிக்கவராக விளங்கிய இவர், இலங்கை சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராகவும் பதவி உயர்த்தப்பட்டு இன்று வரைக்கும் அப்பதவியினை எந்த எதிர்ப்புக்களும் இல்லாமல் முன்னெடுத்து வருவது இவருக்கு சுதந்திர கட்சியில் இருக்கும் சிரேஸ்ட உறுப்பினர்களின் செல்வாக்கினை எடுத்துக் காட்டுவதாகவே அமைகின்றது. அது மட்டுமல்லாமல் பாரளுமன்றத்திலும் சரி, அதற்கு வெளியிலும் சரி ஏனைய கட்சி பாரளமன்ற உறுப்பினர்களோடு பாராளமன்ற சட்டதிட்டங்களை அச்சொட்டாக பின்பற்றும் ஒரு சிறந்த மனிதர் என்றும், எல்லா மக்கள் மத்தியிலும் கட்சிவேறுபாடின்றி பன்முகப்படுத்தப்பட்டு நட்பாக பழகக்கூடிய பாராளமன்ற உறுப்பினர் என்ற நன்பதிப்பையும் தன்னகத்தே வைத்துள்ள அரசியல் சானக்கியமிக்கவர் எனறே சொல்ல முடியும்.

1994ம் ஆண்டு பாராளமன்ற தேர்தலுக்கு பிற்பாடு பொலன்னறுவை மாவட்டத்தில் தனக்கென அதிகப்படியான விருப்பு வாக்கு வங்கியினை வைத்துக் கொண்டுள்ள இவர் மாவட்ட விவசாயிகளின் மனதினை கொள்ளை கொண்டவர் என்பதற்கு அப்பாற் சென்று முழு இலங்கை வாழ் விவசாயிகளின் மனதிலுல் இடம்பிடித்துள்ளர் என்றே சொல்ல முடியும்.

தொடர்ந்து 2000, 2001 ,2004, 2010ம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளமன்ற தேர்தல்களில் மாவட்டத்தில் அதிகப்படியான விருப்பு வாக்க்குகளை பெற்று பாராளமன்றத்துக்கு சென்ற இவர் 2006ம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதி அதிமேதகு மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தில் விவசாய நீர்பாசனதுறை, மாகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் துறை அமைச்சராக பதவிவகித்ததன் பலனாக வாழ்வாதாரத்தில் பின்தங்கியா விவசாய துறையினர் மத்தியில் தனது செல்வாக்கினை பதிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்ததுள்ளமையினையும் முக்கியமாக குறிப்பிட முடியும்.

தொடர்ந்து 2010ம் ஆண்டு அதிமேதகு மகிந்தராஜ பக்ஸவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பாரளமன்ற தேர்தலிலும் மாவட்டத்தின் அதிகப்படியான விருப்பு வாக்குகளை பெற்று பாரளமன்ற கதிரையில் உட்கார்ந்த மைத்திரிபால இலங்கையில் முக்கிய சேவையாகவும், அமைச்சாகவும் கருதப்படுகின்ற சுகாதார துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டு பொது வேட்பாளராக அவருடைய பெயர் வெளியாகும் வரைக்கும் நாட்டுக்கு சுகாதார துறை மூலம் முக்கிய பங்காற்றியவர் என்ற கருத்து நாடாளாவிய ரீதியில் பரவலாக மக்கள் மத்தியில் உள்ள விடயமாகும்..

இதற்கு எல்லாவற்றுக்கும் அப்பால் 2008ம் ஆண்டு ஒக்டோபர் 9ம் திகதி அவர் பயணித்த வாகன தொடரணி மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலிருந்து மயிரிழையில் உயிர்தப்பியிருந்தமை அவருடைய அரசியல் வாழ்க்கையில் முக்கிய சம்பவமாகவே பார்க்கப்படுகின்றது. இந்த தற்கொலை குண்டு தாக்குதலில் எழு பேர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியும், ஒருவர் உயிர்துறந்ததும் குறிப்பிடதக்க விடயமாகும்.

இவ்வாறு நீண்ட அரசியல் வரலாற்றினையும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வரலாற்றில் அதன் வளர்ச்சிப்படியில் முக்கிய நபராக நின்று பங்காற்றியுள்ள மைத்திரிபால ஸ்ரீசேனவை எதிர்கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலுடன் பொது வேட்பாளராக களமிறக்கியுள்ளமையானது அவரை நாட்டு மக்கள் அதிகாரத்தில் உள்ள தற்போதைய ஜனாதிபதியை எல்லாவகையிலும் எதிர் கொள்ளக்கூடியவர் என்ற நோக்கின் அடிப்படையிலும், , மீதிக் கணக்கின் அடிப்படையில் எதிர்பார்க்கின்ற எதிர்கட்ட்சிகளின் வாக்கு வங்கிகளுக்கு தேவைப்படுகின்ற வாக்குகளை தன்னோடு சேர்ந்து வந்துள்ள ஏனைய உறுப்பினர்களை கொண்டும், சுதந்திர கட்சியின் ஆதரவாளர்களின் கனிசமான வாக்குகளை கொண்டும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிகையே ரணில், சந்திரிகா, சோபித்த தேரர், சஜித் போன்றொர்களின் விட்டுகொடுப்பின்பால் பொதுவேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற உண்மையும் வெளிச்சமாகின்றது.

எது எப்படி இருந்தாலும் தற்போதைய அதிமேதகு ஜனாதிபதியின் 10 வருட ஆட்சிக்காலத்தில் அமைச்சரவையில் முக்கிய அந்தஸ்தினை பெற்றவராக இருந்தும், அரசாங்கத்தின் முக்கியமான அரசியல் வியூகங்களில் முக்கிய பாத்திரத்தினை வகித்தும், இறுதிவரைக்கும் அரசாங்கத்துக்கு விசுவாசமாகவும், ஜானாதிபதி அவர்களின் முக்கியமான தூண்களில் ஒருவராகவும் விழங்கிய மைத்திரிபால ஸ்ரீசேன கடைசிக் கட்டத்தில் அரசாங்கத்தை விட்டு விலகி பொது வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமையினை பெருபான்மை சமூகமானது அவரின் மேல் முழு நம்பிக்கை வைத்து அரசியல் மாற்றத்துக்கான வருங்கால ஜனாதிபதி

என்பதனை ஏற்று அவருக்கு வாக்களிக்க போகின்றதா அல்லது இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற விலைவாசிகளின் அகோரக் கொடுமைகளின் பிடியிலிருந்தும், ஏனைய அரசியல் பிரச்சனைகளிருந்தும், நிரந்தர தீர்வு வரவேண்டும் என்றால் அரசியல் மாற்றமே ஒரே வழி என தீர்மானித்து மைத்திரிபாலவை ஜனாதிபதி ஆக்கப் போகின்றார்களா, அல்லது முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததன் நன்றிக்கடனை மட்டும் மையமாக வைத்து இம்முறையும் தற்போதைய ஜானாதிபதி அதிமேதகு மஹிந்தராஜ பக்ஸ அவர்களுக்கே வாக்களிக்கப் போகின்றார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கடைசியாக எது எவ்வாறு நடந்தாலும் சிறுபான்மை சமூகம் என்றடிப்படையில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் சமகாலத்தில் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களை மட்டும் கருத்தில் கொள்ளாது தேசிய மட்டத்திலும், சுதந்திர இலங்கை என்ற வகையில் தீர்க்கமான முறையில் சிந்தித்து காத்திரமான தலைவனுக்கு வாக்களிப்பதற்கு இலங்கை வாழ் முஸ்லிம்களின் அரசியல் தலைமைகளும், புத்தி ஜீவிகளும் நாட்டின் சிறு பான்மையினமான முஸ்லிம்களை தேர்தல் நடைபெறுவதற்கு இடையில் உள்ள பெறுமதி மிக்க நாட்களை சிறந்த அரசியல் வழிகாட்டலின் மூலம் ஒருமித்த குரலுடன், சுய அரசியல் இலாபங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலையான , தீர்க்கமான முடிவினை எடுக்கச் செய்வதானது நாட்டின் சிறுபான்மையின முஸ்லிம்களின் எதிர்கால அரசியல் இருப்புக்களையும், சுய உரிமையினையும் பாதுகாப்பதற்கு அவர்களால் வரலாற்றில் பதியப்பட இருக்கின்ற மிக முக்கியமான சரித்திரம் என்பது என்னுடைய கருத்தாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :