அஷ்ரப் ஏ சமத்-
எதிர்வரும் 17ஆம் திகதி திங்கற்கிழமை மு.பகல் 11 மணிக்கு கொழும்பு கலாதாரி ஹோட்டலில் மாதுலாவே சோபித்த தேரர் முண்னிலையில் சகல அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைய ஓழிப்பதற்கான ஒப்பந்தத்தில் 19க்கும் மேற்பட்ட கட்சிகள் கைச்சாத்திட உள்ளன.
சிலநேரம் இவ் நிகழ்வு நடைபெறும் இடம் மாற்றப்படும் வாய்ப்பு உள்ளது. என மாதுலவாவே தேரரின் என்.ஜி.ஓ அமைப்பின் பிரதான அமைப்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்கிரமரத்தின தெரிவித்துள்ளார்.
இந் நிகழ்வுக்கு தணியார் வைத்தியசாலையில் தங்கியிருக்கும் மாதுலாவேத் தேரர் தண்னை ஒர் அம்புலன்ஸ் வண்டி ஊடாகச் கொண்டு செல்லும்படியும் இந்த ஒப்பந்தத்தை என் முன்னிலையில் நிறைவேற்றிவிடல் வேண்டும். அவரை வைத்தியசாலையில் பார்வையிடும் கட்சித் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எக்காரணம் கொண்டும் இந் நிகழ்வை ஒத்திப்போட வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார். அதற்காகவே அவர் தணியார் மற்றும் அவரது சொந்த தணிப்பட்ட வைத்தியர் ஒருவரது வைத்தியசாலையில் தங்கி நின்று சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந் நிகழ்வில் எதிர்கட்சியான ஜக்கிய தேசியக் கட்சி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மேலும் அர்ஜூன ரணதுங்க, மங்கள சமரவீர, கரு ஜயசுரிய, முன்னாள் நீதியரசர்கள் சரத் என். சில்வா, சிராணி பண்டாரநாயக்க ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் மாற்று அமைப்பு, சரத் பொண்சேகாவின் கட்சி, தேசிய ஜக்கிய முன்னணி, மவ்பிமா ஜனத்தா கட்சி, ருஹூனு ஜனத்தா கட்சி. ஜக்கிய மக்கள் பெரமுனே, ஊடகவியலாளர் சங்கம், சுதந்திர ஊடகவியலாளர்கள் அமைப்பு, புத்திஜீவிகள் அமைப்பு, பல்கலைக்கழக பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் அமைப்பு, இடதுசாரியில் பிரிந்த அமைப்பினர், இலங்கை கொமிஸ் கட்சியின் பிரிந்த அமைப்பினர், நவ சிகல உருமைய, மேலும் பல அமைப்புக்கள் இவ் ஒப்பந்தத்தில் கைசாத்திடுவர்..jpg)
0 comments :
Post a Comment