இரண்டு மாடுகளுடைய தலை அறுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்ட விடயம் விவசாயிகளுக்கு இன மோதல்களை உண்டாக்க முயற்சி-தவம்

திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவயடிச் சந்தியில் இரண்டு மாடுகளுடைய தலை  அறுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்ட விடயம் விவசாயிகளுக்கும் அதே போன்று  பண்ணையாளர்களுக்கும் இடையே ஏற்பட்டிருக்கின்ற கருத்து வேறுபாட்டினை ஒரு இன மோதலாக மாற்றுவதற்கு எடுக்கப்படுகின்ற ஒரு சதி முயற்சியாகவே எங்களால் பார்க்கப்படுகிறது என  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; 

இராணுவம் மற்றும் விசேட  அதிரடிப்படையினர் அங்கு நிலை கொண்டுள்ள நிலையிலும் அதே போன்று பொலிசார் தங்களுடைய  ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்ற நிலையிலும் இவ்வாறு மாடுகளை அறுத்து அதன் தலைகளை ஒரு  பாதுகாப்புப் பிரதேசமாக இருக்கின்ற நாவயடிச் சந்தியில் கொண்டுபோய் வைப்பது என்பது  சாதாரணமான தரப்பினரால் செய்யக் கூடிய ஒரு விடயமாக இல்லை.

ஆகவே இதன் பின்னணியில் பாரிய ஒரு சதி முயற்சி இருக்கவேண்டும் என்பதனால் இரண்டு  சமூகங்களும் இவ் விடயத்தில் ஏற்பட்டிருக்கின்ற சிக்கலானா நிலமை தொடர்பாக விழிப்பாக இருந்து  இதனை சமூகப் பிரச்சினையாக மாற்றி விடாமல் அதே போன்று யாருடைய சதி முயற்சிகளுக்கும்  ஆட்பட்டு விடாமலும் தங்களுடைய வாழ்வாதாரத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்கான போராட்டமாக  மாத்திரம் நகர்த்திச் செல்ல வேண்டும் என நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்;. 

இவ் விடயத்தை உற்ரு நோக்குகின்ற சிந்திக்கக் கூடிய அனைவரும் இதில் மூன்றாம் தரப் பொன்றின்  கை இருப்பதனை மிக இலகுவாக புரிந்து கொள்வார்கள். இவ் விடயத்தினை விவசாயிகளும், அதே போன்று பண்ணையாளர்களும் மிக வன்மையாக கண்டிக்க  முன்வருவதோடு, இவ்வாறான விடயம் இன்னும் ஒரு முறை அரங்கேறாமல் தடுப்பதற்கு முன்வரவேண்டும்  எனவும், கனிவாக வேண்டிக் கொள்கின்றேன். அதே போன்று இது தொடர்பாக அதிகாரிகள், உரிய  திணைக்களங்கள் விசாரணை மேற்கொண்டு இதற்கு பின்னணியில் உள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்த  வேண்டும் எனவும், கேட்டுக் கொள்கின்றேன். என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :