கிழக்கு மாகாண இலக்கிய விழா 2014இல் பரிசுபெற்ற கலைஞர்கள்
கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2014ஆம் ஆண்டுக்கான எழுவானில் இலக்கிய விழா எனும் பெயரில் அம்பாரை டி.எஸ்.சேனநாயக்கா வித்தியாலத்தில் கடந்த13.11.2014 நடைபெற்றது.
இவ்விழாவில் கிழக்கு மாகாணப் கல்வி பண்பாட்டலுவல்கள் காணி, காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சர் கௌரவ விமலவீரதிசாநாயக்க மற்றும் அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ. புஸ்பகுமார, பணிப்பாளர் றுயுடு. விக்கிரம ஆராச்சி, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் என்.ரி. நிஸாம், அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம். காசீம் மற்றும் ஏனைய வலயக் கல்விப்பாளர்கள், அமைச்சின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கலைஞர்கள் பலர் கௌரவிக்கப்பட்டனர்.
வித்தகர் விருதினை டாக்டர் அகமது லெவ்வை குருஷித் தாஸிம், முருகேசு சடாட்சரன், சூசை எட்வேட், சதாசிவம் மகாலிங்கம், அகமதுலெவ்வை வெள்ளைத் தம்பி, பிச்சைத் தம்பி அஸீஸ், அழகையா இருதயநாதன், பாலமுனை பாறுக், திருமதி சந்திரசேகரம், சிவிபி. மாணிக்கம், கச்சு முகம்மது இக்பால், திருமலை சுந்தா ஆகியோரும், சிறந்த தமிழ் நூல் எழுத்தாளர்களுக்கான விருதினை கா.வீரக்குட்டி, எஸ்.முத்துமீரான், டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், ஏ.எல். நௌபீர், எம்.எச். வஹாப், ச. அருளானந்தம், ஆ.அரசரெத்தினம், அ. ஸதீஸ்குமார், சுபாலினி இளங்கோ, வ. சண்முகநாதன் ஆகியோரும் பெற்றுக் கொண்டனர்.
ஆக்கங்களுக்கான போட்டியில் ஒலுவிலைச் சேர்ந்த ஆசிரியர் ஜே.வஹாப்தீன் மூன்று பரிசுகளையும், எம்.ஏ. காலிதா நஸ்ஹத், ஏ.என். நுஷ்தா, பேகம் சஸ்னா பாத்திமா, ஏ.எச். நுஸ்லா ஆகியோரும், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.ஜி. அஸ்ஸாரி, அன்புடீன் பாத்திமா ஸகீனத், மன்சூர் பாத்திமா சம்யா, எம். முபாஹித் ஆகியோரும் பரிசு மற்றும் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர். இம்முறை அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஆக்கப்படைப்பாளர்கள் அதிகளவில் வெற்றியீட்டியது இதுவே முதற்தடவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பரிசு பெற்ற படைப்பாளர்களையும் படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment