ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் இரத்த தான முகாம் அக்கரைப்பற்றில்!

பி. முஹாஜிரீன்-

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அக்கரைப்பற்று கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்த தான முகாம் இன்று (26) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

அக்கரைப்பற்று கிளை அலுவலக வளாகத்தில் பொறுப்பாளர் ஏ.எச்.எம். சிபாஸ் தலைமையில் நடைபெற்ற இவ் இரத்ததான முகாமில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவு வைத்தியர்களான டாக்டர் பீ.டபிள்யூ. சந்திம, டாக்டர் ஐ. சுதத் ஆகியோருடன் தாதிய உத்தியோகத்தர்களும் சுகாதார அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அக்கரைப்பற்று கிளைத் தொண்டர்கள் பங்குபற்றியதுடன் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.

உயிர் காக்கும் உன்னதப் பணியாகவும் இனங்களுக்கிடையில் சமூக சகவாழ்வை விதைக்கும் சமூகப்பணியாகவும் இன, மத, மொழி, நிற வேறுபாடுகளைக் கடந்து மனிதத்துவத்தை வாழ வைக்கும் நற்பணியாகவும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினால் இவ் இரத்த தான நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்வின்போது, ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அக்கரைப்பற்று கிளையினால் அவசர இரத்த தானப் பிரிவும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. விபத்து, அறுவைச் சிகிச்சை, பிரசவம் போன்ற அவசர நிலைமைகளின்போது உடனடியாக இரத்த தானம் செய்யக்கூடிய வகையில் இன மத வேறுபாடுகளுக்கப்பால் இரத்தக் கொடை வழங்கும் நோக்கில் இப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இரத்தக் கொடை வழங்கி இலங்கை மண்டல விருது பெற்று உதிரக் கொடையில் முதலிடம் பெற்றுள்ளது. மேலும் தமாம், குவைத், கட்டார், துபாய், சவூதி அரேபியா, அபுதாபி ஆகிய நாடுகளிலும் ஜமாஅத் பல மண்டல விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :